நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்க உள்ள படத்தை நெல்சன் இயக்க உள்ளார். அப்படத்திற்காக சூப்பர்ஸ்டார் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளி மாநிலத்திலும், வெளி நாடுகளிலும் ரசிகர்களைக் கொண்ட நட்சத்திரங்கள் தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். பல வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ள தகவல் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. தலைவர் 174 X KH 238 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த ப்ராஜெக்ட்டை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். தற்போது, அந்தப் படத்தில் ரஜினிகாந்தின் சம்பளம் குறித்த ஒரு தகவல் ஒன்று வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
24
ரஜினிக்கு சம்பளம் எவ்வளவு?
இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த் 225 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்திற்கான ஒரு ப்ரோமோ ஷூட் முடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் 80களின் விண்டேஜ் ஸ்டைலில் இந்த ப்ரோமோவில் தோன்றியுள்ளனர். நட்பை மையமாகக் கொண்டு, டார்க் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் இன்பன் உதயநிதி தான் தயாரிக்க உள்ளாராம்.
34
நெல்சனுக்கு அடித்த ஜாக்பாட்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள மூன்றாவது படமாக தலைவர் 174 இருக்கும். இதற்கு முன்னதாக அவர் ஜெயிலர் 1 படத்தில் நடித்திருந்தார். தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பது இதுவே முதன்முறையாகும். ரஜினி, கமல் என இரு பெரும் ஜாம்பவான்கள் இணையும் படம் என்பதால் அதற்கான எதிர்பார்ப்பு தற்போதே எகிறத் தொடங்கிவிட்டன.
நடிகர் ரஜினிகாந்த் கமலுடன் நடிப்பது மட்டுமின்றி கமல் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். தலைவர் 173 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென விலகிவிட்டார். பின்னர் அவருக்கு பதிலாக சிபி சக்கரவர்த்தி அப்படத்தை இயக்க கமிட்டாகி உள்ளார். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து டான் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை அவர் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.