விஜி - விக்ரம் வாழ்வில் திடீர் திருப்பம் ; மகன், மகளுக்காக ஒன்று சேர்வார்களா?

Published : Feb 13, 2026, 03:52 PM IST

Chellame Chellame Serial Today Episode : செல்லமே செல்லமே சீரியலில் விஜி மற்றும் விக்ரம் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்ட நிலையில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

PREV
15
Chellame Chellame Serial Today Episode Highlights

செல்லமே செல்லமே சீரியல் சன் டிவியில் இரவு 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நேற்றைய எபிசோடில் தெய்வானை கவின் இடம் உன் அப்பாவிற்கு திருமணம் செய்ய சொல்லி நீ சொல்லு என்று கவினை வற்புறுத்துகின்றனர். கவின் எங்க அப்பா கல்யாணம் என்ற பேச்சை எடுத்தாலே ரொம்ப கோபப்படுறாரு. இதுல நான் எப்படி பொய் சொல்றது என்று குழம்பி நிற்கிறான் ஆனால் தெய்வானை நீ சொன்னா தான் உனக்கு புது அம்மா கிடைப்பாங்க என்று அவன் மனதில் ஆசைகளை தூண்டி கவினை விக்ரமிடம் பேச அனுப்புகிறார்கள். 

25
Sun TV Serial Chellame Chellame

அதன் பிறகு கவின் விக்ரமிடம் சென்று அப்பா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்கப்பா. அப்பதான் எனக்கு இன்னொரு அம்மா கிடைப்பாங்க என்றெல்லாம் சென்டிமிட்டாக தன் அப்பாவிடம் பேச விக்ரம் மனம் உடைந்து போகிறான் . பழைய ஞாபகங்கள் அவனுக்கு திரும்பி வருகிறது .விஜயின் உடன் வாழ்ந்த வாழ்க்கை அவனே அவளிடம் சண்டை இட்ட வாழ்க்கை அனைத்தும் அவன் ஞாபகப்படுத்தி பார்க்கிறான். அதன் பிறகு மன வேதனை தாங்காமல் கோவிலுக்கு சென்று சாமியிடம் வேண்டிக் கொள்வோம் என்று கோயிலுக்கு செல்கிறார் விக்ரம். அது ஒரு புறம் இருக்க மறுபுறம் விஜி நிலாவின் அப்பா மீது இருக்கும் ஆசையினால் பாட்டியிடம் தன் அப்பாவை பற்றி விசாரித்த நிலா அதனை கேட்ட விஜி மிகவும் கவலை பட்டால் யாரு நினைப்பு வரக்கூடாதுன்னு நினைச்சேனோ இப்போ என் பொண்ணு அத பத்தி தான் கேட்கிறாள்.நான் என்ன பண்ண போறேன் என்று நினைத்துக் கொண்டே கோயிலுக்கு வந்தார் விஜி . இருவரும் சாமியிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டனர். 

35
Viji and Vikram Meeting

யாரு நான் பாக்க கூடாது நினைக்கிறேனோ அவங்க பத்தி தான் என் பொண்ணு நிலா கேக்குறாள்.நான் என்ன பண்ண போறேன் சாமி. நீங்க தான் எனக்கு ஒரு முடிவு சொல்லணும் என்று விஜி கேட்க. யார் என் வாழ்க்கையில இருந்து போனவங்களை திரும்பி பார்க்கவே கூடாது நினைக்கவே கூடாதுனு நினைக்கிறேனோ அவங்கள தான் என் பையன் திரும்பி கேட்கிறான் நான் என்ன பண்ண என்று விக்ரம் சாமியிடம் வேண்டிக்கொள்கிறான். இவர்கள் இருவரும் சாமியை கும்பிட்டு பிரகாரத்தை சுற்றி வரும் போது விஜி ஒரு பெண்மணி அங்க பிரதோஷம் செய்ய செய்து கொண்டிருக்கிறார் அப்போது விக்ரம் எதிரே வருகிறார் விஜியை பார்த்து விடுகிறார் விக்ரம் பார்த்ததும் மறைந்து கொள்கிறார். 

45
செல்லமே செல்லமே சீரியல் எபிசோடு

இவ இன்னும் இந்த ஊர்ல தான் இருக்காளா இன்னும் உயிரோட தான் இருக்காளா எப்படி இங்கே இருக்கிறாய் என்று பல கேள்விகளை மனதுக்குள் எழுப்புகிறார். அதிர்ச்சியில் அங்கு இருந்து தெரியாமல் போய்விட வேண்டும் என்று முயற்சிக்கிறார். அப்போது எதிரே வந்த ஒரு ஒரு நபர் மீது மோதி தாம்பாள தட்டில் இருக்கும் மாலை தேங்காய் அனைத்தும் கீழே விழுகிறது. தாம்பாள தட்டின் சத்தம் கேட்டு விஜி பார்க்கிறார் 

55
விஜி மற்றும் விக்ரம்

விக்ரம் அங்கு குனிந்து மாலைகளை எடுத்து தட்டில் வைப்பதை பார்க்கிறார். அதிர்ச்சியில் இருக்கிறார் விஜி விக்ரம் நீண்ட நாளுக்குப் பிறகு யாரை பார்க்கக்கூடாது என்று நினைத்தேனோ அவனையே பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது என்று கவலையுடன் விக்ரமே பார்த்துக் கொண்டிருக்கிறார் விக்ரம் அனைத்தையும் எடுத்துக் கொடுத்துவிட்டு நடந்து செல்கிறார் அதனை கண்ட விஜி மனக்கவலை தாங்காமல் ஒரு ஓரமாக போய் உட்காருகிறார். அந்த தட்டில் இருக்கும் அனைத்தும் எடுத்துக் கொடுத்துவிட்டு வெளியே சென்று செருப்பை போட்டு தன் காரின் கதவை ஓப்பன் செய்து அதை இடத்திலேயே உட்கார்ந்து இருக்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories