
ஒரு இடத்தில் அசிங்கப்பட்டு, அப்போதைக்கு எந்த பதிலடியும் கொடுக்க முடியாமல்... கூனி குறுகி நின்றாலும், அவரையே மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து, தரமான ரிவெஞ் கொடுத்த மூன்று நடிகர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க:
அல்லு அர்ஜுன்:
நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்த பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த, சைமா விருது நிகழ்ச்சியில், 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த நடிகை நயன்தாராவுக்கு, அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த அவார்டை கொடுப்பதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் மீது உள்ள காதலால், அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லு அர்ஜுனை புறக்கணிப்பது போல் அனைவர் மத்தியிலும், இந்த அவார்டை நான் விக்னேஷ் சிவன் கைகளால் வாங்குவது தான் சரியாக இருக்கும் என கூறி அல்லு அர்ஜுனை ஓரமாக நிற்க வைத்துவிட்டு, விக்னேஷ் சிவனை மேடைக்கு வர வைத்து அவருடைய கைகளால் விருதைப் பெற்றார். இந்த சம்பவம் அல்லு அர்ஜுனுக்கு பயங்கரமான இன்சல்ட்டாக பார்க்கப்பட்டது. பலரும் நயன்தாராவின் இந்த செயலை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை நயன்தாராவுக்கு நான்கு முறை வாய்ப்புகள் வந்த போதும்.... நயன்தாரா ஓகே சொல்லியும் அல்லு அர்ஜுன் நயன்தாராவை புறக்கணித்து விட்டார். அன்று நயன்தாராவால் புறக்கணிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன், இன்று பான் இந்தியா லெவலுக்கு சென்று, புஷ்பா படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். கடந்த ஆண்டு Behindwood அவார்ட் நிகழ்ச்சியில், அல்லு அர்ஜுனுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்து நயன்தாராவே பிரமித்து போனார். எனவே ரிவெஞ் என்றால் இப்படி இருக்கணும் என ரசிகர்கள் கூறுவது உண்டு.
90ஸ் முதல் 2K வரை - பஞ்சுமிட்டாயை வைத்து கோலிவுட்டில் மெகா ஹிட்டான காதல் பாடல்கள்!
தனுஷ்:
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில், இன்று முன்னணி நடிகராக இருப்பதற்கு அவருடைய அண்ணன் செல்வராகவனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தனுஷ், செல்வராகவன் மீது சகோதரராகவும், குருவாகவும் அதீத மரியாதை வைத்திருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய அண்ணனை இயக்குனராக பார்த்தால் இப்போதும் பயந்து கொண்டு தான் நடிப்பாராம். ஒவ்வொரு காட்சியும் பர்ஃபக்ட்டாக இருக்க வேண்டும் என நினைப்பவர். தனுஷை பல முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்தும் உள்ளாராம்.
இதையெல்லாம் மனதில் வைத்து கொண்டு, சமீபத்தில் தான் இயக்கி நடித்த தன்னுடைய 50-ஆவது படமான ராயன் படத்தில் அண்ணன் செல்வராகவனை முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தரமான ரிவெஞ் கொடுத்துள்ளார். இதை ராயன் படத்தின் ஆடியோ லாஞ்சில் தனுஷ் கூறி உள்ளார். என்னை நீங்கள் இயக்கம் போது, இத்தனை முறை தான் பார்க்கணும், இத்தனை முறை தான் கண்ணை சிமிட்டானும் என்று சொல்லி டார்ச்சர் பண்ணுனீங்க... உங்க வைத்து நான் படம் எடுக்கும் போது சந்தோஷமே தனி என கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். தனுஷின் இந்த சம்பவமும் தரமான ரிவெஞ்சாக பார்க்கப்பட்டது.
ரஜினிகாந்த்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏவிஎம் ஸ்டுடியோவில், 70-களில்... அதாவது ஹீரோவாக அறிமுகமான போது ஒரு படத்துல நடித்துள்ளார். அந்த படத்தின் புரடியூசரும், இயக்குனர் ரஜினிகாந்த் வீட்டுக்கு செல்ல கார் ஏற்பாடு செய்யும் படி கூற, அதற்க்கு அந்த புரடியூசர்... டைரக்டருக்கே காரு கிடையாது, உனக்கு காரு வேண்டுமா? நடந்தே போ என சொல்லி அசிங்கப்படுத்தி உள்ளார். அப்போ நடந்து போன ரஜினிகாந்த், இதே இடத்தில் ஒரு காரை கொண்டு வந்து நிறுத்தி, இந்த ஏவியம் ஸ்டூடியோவில் தன்னை அந்த தயாரிப்பாளரே திரும்பி பார்க்கும் ரேஞ்சுக்கு வளர்வேன் என சபதம் எடுத்துள்ளார். பின்னர் இத்தாலியன் கிரியேட்டோ காரை வாங்கி வந்து ஏவியம் ஸ்டுடியோ உள்ளே அந்த ப்ரொடியூசர் காருக்கு பக்கத்திலேயே நிறுத்தி சிகரெட்டை செம்ம ஸ்டைலிஷாக பிடித்து கொண்டே இறங்கி நடந்து வந்தாராம். இதுவும் ஒரு தரமான ரிவெஞ்சாகவே பார்க்கப்படுகிறது.
எதிர்பாராத எலிமினேஷன்; பிக்பாஸ் வீட்டிற்கு இந்த வாரம் குட் பை சொன்ன போட்டியாளர் இவர் தான்!