ஒரு வருடத்திற்கு முன்பு ஜூப்ளி ஹில்ஸில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் மிகவும் ஆடம்பரமான வீட்டை அல்லு அர்ஜுன் கட்டியுள்ளார். இந்த வீட்டைப் பொறுத்தவரை அல்லு அர்ஜுனுக்கு ஒரு குறை இருந்தது. 100 கோடி ரூபாயில் கட்டிய வீட்டில் என்ன குறை இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது கட்டுமானம் சம்பந்தப்பட்டது அல்ல, உணர்வுபூர்வமானது. அல்லு அர்ஜுன் கட்டிய வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி நடிகர் கிருஷ்ணம் ராஜுவின் வீடும் இருந்தது. அதாவது, அவர்கள் இருவரும் அக்கம் பக்கத்தினர்.