செல்பி எடுத்தது குத்தமா? நாக சைதன்யா - சோபிதா ஜோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்; காரணம் என்ன?

First Published | Oct 21, 2024, 8:45 AM IST

Naga Chaitanya - Sobhita Dhulipala Selfie : நாக சைதன்யா-சோபிதா துலிபாலா ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில் அவர்கள் ஜோடியாக எடுத்துக்கொண்ட செல்பிக்கு நெகடிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Shobita - Naga Chaitanya

நாக சைதன்யா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால் நாக சைதன்யா - சோபிதா திடீரென ஹாட் டாப்பிக்கானார்கள். இவர்களின் நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. அக்கினேனி குடும்பத்தின் புதிய மருமகளைப் பற்றி பல விவாதங்கள் தொடங்கின. இந்தச் சூழலில் மற்றொரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

Naga Chaitanya Engagement Photos

முன்னதாக நாக சைதன்யா - சோபிதா துலிபாலா காதலிப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. இருவரும் பலமுறை வெளிநாடுகளில் ஜோடியாகக் காணப்பட்டனர். அடிக்கடி சுற்றுலா செல்வார்கள் என்றும் கூறப்பட்டது. இதனால் டேட்டிங் வதந்திகள் அதிகரித்தன. அவற்றை உண்மையாக்கும் விதமாக நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதை அக்கினேனி நாகார்ஜுனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

நாகார்ஜுனா நிச்சயதார்த்தப் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து திருமணத்திற்கு இன்னும் சிறிது காலம் இருப்பதாகத் தெரிவித்தார். நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு முதல்முறையாக நாக சைதன்யா, சோபிதா இருவரும் ஜோடியாக லிஃப்டில் செல்பி எடுத்த புகைப்படம் வைரலாகிறது. 

இதையும் படியுங்கள்... சமந்தாவுக்காக சண்டைக்கு வந்த சைதன்யா! விவாகரத்து விஷயத்தில் அந்தர் பல்டி அடித்த அமைச்சர் கொண்டா சுரேகா!

Tap to resize

Naga Chaitanya latest selfie with Shobita

அந்த புகைப்படத்தில் கருப்பு உடையில் கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் இந்த ஜோடி மிகவும் ஸ்டைலாக இருக்கிறார்கள்.  நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு சோபிதா துலிபாலா சமூக வலைதளங்களில் கடுமையாக டிரோல் செய்யப்பட்டார். இதனால் சோபிதா சமூக ஊடகங்களைப் பெரிதாகப் பயன்படுத்துவதில்லை. அதேபோல் நாக சைதன்யாவும் சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் கடும் விமர்சனத்துக்குள்ளானதால் பெரிதாக சோசியல் மீடியாவை பயன்படுத்துவதில்லை.

இந்த நிலையில் சோபிதா உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நாக சைதன்யாவை நெட்டிசன்கள் கமெண்டில் கழுவி ஊற்றி வருகின்றனர். இருவரும் ஒர்ஸ்ட் ஜோடி என கிண்டலடித்து வருகின்றனர். இது டோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Shobita, Naga Chaitanya, Samantha

நாக சைதன்யா கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்டார். காதலித்து கரம்பிடித்த இந்த ஜோடி திருமணமான நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். சமந்தா உடனான பிரிவுக்கு பின்னர் சோபிதா உடன் டேட்டிங் செய்ய தொடங்கிய நாக சைதன்யா, குடும்பத்தினர் சம்மதத்துடன் அவரை விரைவில் கரம்பிடிக்கவும் உள்ளார். அவரது திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்துக்கு முன்னரே நாக சைதன்யா - சோபிதா ஜோடிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் அவர்கள் இருவரும் அப்செட்டாகி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... சமந்தா குறித்து புதிய தகவலை வெளியிட்ட நடிகை சோபிதா துலிபாலா!!

Latest Videos

click me!