Published : Oct 21, 2024, 11:15 AM ISTUpdated : Oct 21, 2024, 11:25 AM IST
Indraja Baby Shower Photos : நடிகர் ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜாவுக்கு வீட்டிலேயே சிம்பிளாக சீர் வழங்கும் விழா நடத்தியபோது எடுத்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் ரோபோ சங்கர். இதையடுத்து தனுஷின் மாரி படம் மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த ரோபோ சங்கர் அடுத்தடுத்து பல முன்னணி நாயகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.
28
indraja, karthik
நடிகர் ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்கிற மகளும் உள்ளார். இவரும் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய்யின் பிகில் படத்தில் இவர் நடித்த பாண்டியம்மா கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின்னர் விருமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்திரஜா.
38
indraja Robo Shankar Pregnant
இதையடுத்து சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திரஜா, கார்த்தி என்பவரை காதலித்து கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்.
48
indraja Robo Shankar
இவர்களது திருமணம் மதுரையில் குடும்பத்தினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.இதன் பின்னர் சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தினார் ரோபோ சங்கர்.
அதில் கமல்ஹாசன் முதல் விஜய் டிவி பிரபலங்கள் வரை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் படையெடுத்து வந்து கார்த்திக் - இந்திரஜா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
68
indraja Robo Shankar Baby Shower
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார் இந்திரஜா. இந்நிலையில், அவருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சியை தன் வீட்டில் நடத்தி அழகு பார்த்துள்ளார் நடிகர் ரோபோ சங்கர். இதன் புகைப்படத்தை இந்திரஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
78
Robo Shankar daughter Indraja Pregnant
அந்த பதிவில் புளிப்பு சுவை பிடித்து குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்து ரசித்த நாள்... 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா என குறிப்பிட்டிருக்கிறார் இந்திரஜா. அந்த விழாவில் ரோபோ சங்கரும் அவரது மனைவி பிரியங்காவும் தங்கள் மகளுக்கு வளையல் மாட்டிவிட்டு மகிழ்ந்தனர்.
88
indraja Robo Shankar photos
இதையடுத்து மகளுக்கு 5ம் மாத சீர் கொடுத்த ரோபோ சங்கர், குடும்பத்தோடு புகைப்படமும் எடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்திரஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.