ரஜினிகாந்தின் 171வது படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் செளபின் சாஹிர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, பாலிவுட் நடிகர் அமீர்கான் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது. இதுதவிர ஸ்ருதிஹாசன், மாறன், காளி வெங்கட், மோனிஷா, ரச்சிதா ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தார்.
24
விமர்சன ரீதியாக சறுக்கிய கூலி
கூலி திரைப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். ஒளிப்பதிவு பணிகளை கிரீஷ் கங்காதரன் மேற்கொண்டிருந்தார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வெளியான முதல் நாளே இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தன. குறிப்பாக படத்தின் லாஜிக் மிஸ்டேக் அதிகளவில் இருந்ததாக நெட்டிசன்கள் கடுமையாக சாடினார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் இப்படத்திற்கு தான் அதிகளவில் நெகடிவ் விமர்சனங்கள் வந்தது.
34
கூலி படைத்த வசூல் சாதனை
விமர்சன ரீதியாக சொதப்பினாலும் இப்படம் வசூலில் தூள் கிளப்பியது. அதன்படி கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் கூலி படைத்தது. இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. அநேகமான வருகிற செப்டம்பர் 5-ந் தேதியுடன் கூலி படத்தின் ஓட்டம் தியேட்டரில் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அன்றைய தினம் சிவகார்த்திகேயனின் மதராஸி உள்பட சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
தியேட்டரில் ஓட்டம் முடிந்த கையோடு ஓடிடிக்கு தாவி இருக்கிறது கூலி திரைப்படம். அதன்படி இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் 11ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கூலி திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் சுமார் ரூ.120 கோடி கொடுத்து வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.