மதராஸி டிக்கெட் முன்பதிவில் கலெக்‌ஷன் அள்ளியதா? காத்துவாங்கியதா? வசூல் நிலவரம் இதோ

Published : Sep 04, 2025, 02:14 PM IST

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் டிக்கெட் முன்பதிவு மூலம் எவ்வளவு வசூலித்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Madharaasi Pre sales Collection

விஜய் அரசியலுக்குள் நுழைந்துள்ள நிலையில், அஜித் பைக் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இவர்களுக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஆதரவைப் பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு உடனடி பதில் இல்லையென்றாலும், இளம் நடிகர்களில் சிவகார்த்திகேயன் முன்னணியில் உள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'அமரன்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி வசூலைக் கடந்தது. அமரன் வெற்றிக்கு பின் அவர் நடிப்பில் தற்போது 'மதராஸி' திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

24
புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் மதராஸி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள 'மதராஸி' படம் நாளை வெளியாகிறது. சினிடிராக் தகவல்படி, தமிழகத்தில் 362 திரையரங்குகளில் 2.2 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு, 3.73 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது வெளியீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முந்தைய நிலவரம். 'ஜெயிலர்', 'தங்கலான்', 'கேப்டன் மில்லர்' படங்களை விட 'மதராஸி' முன்பதிவில் சிறப்பாக உள்ளது. 'லியோ' முதலிடத்தில் உள்ளது. இப்படம் வெளியீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன் 5.81 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. இரண்டாவது இடத்தில் 'அமரன்', மூன்றாவது இடத்தில் 'இந்தியன் 2' உள்ளன. நல்ல விமர்சனங்களைப் பெற்றால், 'மதராஸி' சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மதிப்பை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34
சிவகார்த்திகேயன் சம்பளம்

மதராஸி திரைப்படத்தில் ரகு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் 35 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். இதுதவிர இப்படத்தின் லாபத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையையும் பெற்றுக்கொள்ள டீலிங் போட்டிருக்கிறாராம்.

44
மதராஸி படக்குழு

மதராஸி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் நடித்துள்ளார். மேலும் பிஜு மேனன், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பணிகளை சுதீப் இளமன், படத்தொகுப்பு வேலைகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொண்டிருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அனிருத் உடன் கூட்டணி அமைத்துள்ளார் எஸ்.கே. இவர்கள் இருவரும் டான் படத்திற்கு பின்னர் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்தனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories