ஆந்திர அரசியலில் புயலை கிளப்பிவிட்டு... சைலண்டாக வந்து தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த ரஜினி

First Published | Apr 30, 2023, 12:17 PM IST

சென்னையில் நடைபெற்று வரும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாக்களித்தார்.

தமிழ் சினிமாவில் செயல்பட்டு வரும் சங்கங்களில் முக்கியமானது தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தேர்தல் இன்று காலை 9 மணிக்கு சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பிரபலங்கள் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும், வந்து தனது வாக்கை செலுத்திவிட்டு சென்றார். நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆந்திராவின் நடைபெற்ற என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு தற்போது ஆந்திர அரசியலில் பற்றி எரிகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் ரஜினி பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... ராஜமவுலியின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட பாகிஸ்தான் ! ஆனந்த் மஹிந்திராவால் வெளிவந்த உண்மை

Tap to resize

ஆந்திர அரசியலில் ரஜினியின் பேச்சு இந்த அளவுக்கு புயலைக் கிளப்பியதற்கு காரணம் அவர், சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியதால் தான், அவரின் ஆட்சியில் தான் ஆந்திரா வளர்ச்சி கண்டதாக பேசியதைக் கேட்டு கொந்தளித்துள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ரஜினியின் பேச்சு பதிலடி கொடுத்து வருகின்றனர். அக்கட்சியில் அமைச்சராக இருக்கும்ந் நடிகை ரோஜா, ரஜினியின் பேச்சு காமெடியாக இருப்பதாக கூறி கிண்டலடித்து இருந்தார்.

இப்படி ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பிவிட்ட ரஜினி, தற்போது சைலண்டாக வந்து சென்னையில் நடைபெற்று வரும் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வாக்களித்து சென்றுள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இன்று பதிவாகும் வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலின் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... முதல்நாளைவிட கம்மி வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகாத ‘பொன்னியின் செல்வன் 2’ 2வது நாள் கலெக்‌ஷன் இவ்ளோதானா?

Latest Videos

click me!