தமிழ் சினிமாவில் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வனை நனவாக்கியவர் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்திருந்தார் மணிரத்னம். பிரம்மாண்ட கதையம்சம் கொண்ட படம் இது என்பதால், அதற்கு ஏற்றார்போல் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் நடிக்க வைத்திருந்தார்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டு, ரூ.500 கோடிக்கு மேல் கலெக்ஷனை அள்ளியது. இதனால் உற்சாகம் அடைந்த படக்குழு, அப்படம் ரிலீசாகி 7 மாதங்களுக்கு பின் அதன் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்துள்ளனர். முதல் பாகத்தைப் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்திற்கு சற்று கம்மியாகவே புரமோட் செய்திருந்தனர்.
அது படத்தின் வசூலிலும் எதிரொலித்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 படத்தை உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் ரிலீஸ் செய்திருந்தனர். இவ்வளவு பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் முதல் நாளில் ரூ.65 கோடி வசூலித்து இருந்தது. இது முதல் பாகத்தைவிட கம்மி தான். முதல் பாகம் ரிலீசான முதல் நாளில் ரூ.84 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் கம்மியானதற்கு முக்கிய காரணம் அப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் திரையிட அனுமதி அளிக்காதது தான்.
இதையும் படியுங்கள்... கல்கியே கன்பியூஸ் ஆகும் அளவுக்கு.. பொன்னியின் செல்வனில் இத்தனை மாற்றங்கள் செய்துள்ளாரா மணிரத்னம்? முழு விவரம்
இதனால் இரண்டாவது நாளில் இருந்து பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல் பிக்-அப் ஆகும் என எதிர்பார்த்திருந்த படக்குழுவுக்கு, 2-வது நாள் வசூலும் சற்று ஏமாற்றத்தையே தந்துள்ளது. அதன்படி இப்படம் இரண்டாவது நாளில் 50 முதல் 55 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்நாளோடு ஒப்பிடுகையில் இது 10 கோடி கம்மி தான்.
இதன்மூலம் இரண்டு நாட்கள் முடிவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் ரூ.110 கோடி வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2 நாட்களில் ரூ.150 கோடி வசூலை அள்ளிய நிலையில், இரண்டாம் பாகம் வெறும் 100 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இந்த வசூல் பின்னடைவுக்கு சிறப்பு காட்சி அனுமதி அளிக்கப்படாதது தான் காரணம் என கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆன போது நள்ளிரவு காட்சிகளெல்லாம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணிக்க போவதில்லை... சூசகமாக சொல்கிறாரா அனுஷ்கா? வைரல் வீடியோ இதோ