சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.
கோலிவுட்டின் ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்திற்கு இன்று 75வது பிறந்தநாள். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் வரும் பிறந்தநாள் என்பதால், ரசிகர்கள் அதனை ஒருபுறம் தடபுடலாக கொண்டாடி வர, ரஜினிகாந்த், தன்னுடைய பிறந்தநாளை சிம்பிளாக ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கிறார். ஜெயிலர் 2 பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ள ரஜினி, இயக்குநர் நெல்சன் உடன் சேர்ந்து கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
24
ரஜினிகாந்த் பிறந்தநாள்
கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் 1975 ஆகஸ்ட் 18 அன்று வெளியான 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் ரஜினிகாந்த் வெள்ளித்திரையில் அறிமுகமானார். ஆரம்பத்தில், சினிமா ரசிகர்கள் ரஜினியை வில்லன் வேடங்களில் தான் பார்த்தனர். ஆனால் 1980களில் ஒரு நடிகராக ரஜினியின் வளர்ச்சிக்கு கோலிவுட் சாட்சியாக இருந்தது. 'நெற்றிக்கண்' படம்தான் ரஜினிக்கு முதல் திருப்புமுனையை அளித்தது. சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பெயரை மாற்றி ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டியதும் பாலச்சந்தர் தான்.
34
கோலிவுட் சூப்பர்ஸ்டார் ரஜினி
80-கள் ரஜினியின் நட்சத்திர அந்தஸ்தின் செங்குத்தான வளர்ச்சிக்கு சாட்சியாக இருந்தன என்றால், 90-களின் தமிழ்த் திரையுலகம் அந்த சூப்பர் ஸ்டாரின் கொண்டாட்டமாகவே இருந்தது. ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படங்களான தளபதி, மன்னன், பாண்டியன், பாட்ஷா, முத்து, படையப்பா, அருணாச்சலம் போன்ற படங்கள் இந்தக் காலகட்டத்தில்தான் வெளிவந்தன. மன்னன், பாட்ஷா, படையப்பா போன்ற படங்கள் திரையரங்குகளில் திருவிழா சூழலை உருவாக்கின. ரஜினி என்ற பெயருக்கு நிகரில்லாத நிலைக்குத் திரையுலகம் உயர்ந்தது.
2000-ல் பத்ம பூஷண், 2016-ல் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி இந்திய அரசு ரஜினியை கௌரவித்தது. தெற்காசியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக ஏசியாவீக் இதழும், இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக ஃபோர்ப்ஸ் இந்தியா இதழும் ரஜினிகாந்தைத் தேர்ந்தெடுத்துள்ளன. 2021-ல் தாதாசாகேப் பால்கே விருதும் ரஜினியைத் தேடி வந்தது. பிறந்தநாளை முன்னிட்டு, 1999-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'படையப்பா' இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.