கிரிஷால் முத்து - மீனா இடையே வெடிக்கும் பிரச்சனை; கல்யாணியால் கதிகலங்கி நிற்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை

Published : Dec 12, 2025, 10:59 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை தத்தெடுக்கும் முடிவுக்கு மீனா எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் அப்செட் ஆன முத்து மீண்டும் குடிக்க ஆரம்பித்துவிட்டார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மீனாவை சர்ப்ரைஸ் ஆக அழைத்து சென்று குழந்தைகள் காப்பகத்தில் வைத்து தான் கிரிஷை தத்தெடுக்க இருப்பதாக கூறுவதோடு, அதற்கான நடைமுறைகள் என்ன என்பதை கேட்க, அவரை அங்கிருந்து வெளியே அழைத்து செல்லும் மீனா, இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என கூறிவிடுகிறார். இதனால் கடுப்பான முத்து, தன்னுடைய கார் ஷெட்டிற்கு சென்று அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறார். அப்போது அங்கு வரும் செல்வத்திடம், முன்னர் மீனா தான் கிரிஷை தத்தெடுக்கும் ஐடியா கொடுத்தா, ஆனா இப்போ அவளே வேண்டாம்னு சொல்றா, அதுக்கு பின்னணியில் ஏதோ ஒரு காரணம் இருக்கு என கூற, அதை கண்டுபிடிக்க சொல்கிறார் செல்வம்.

24
புது குண்டை தூக்கிப்போட்ட ஸ்ருதியின் அம்மா

மறுபுறம் ஃபுட் பெஸ்டிவலுக்காக கோவா சென்றிருக்கும் ரவி அங்கிருந்து வீடியோ கால் மூலம் ஸ்ருதியிடம் பேசி தான் வென்ற கோப்பையையும் காட்டி மகிழ்கிறார். அந்த நேரத்தில் ரெஸ்டாரண்டுக்கு வரும் ஸ்ருதியின் அம்மா, ரவியை பற்றி ஒன்னு சொல்ல வேண்டும் என கூறி ஸ்ருதியை தனியே அழைத்து செல்கிறார். ரவி கோவாவில் வேறு ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுவதாகவும், நம்முடைய சொந்தக்காரர் ஒருவர் அதனை போட்டோ எடுத்து அனுப்பியதாகவும் கூற, ரவி அப்படிப்பட்டவன் இல்லை, நீத்து அவனுடைய பாஸ், அவளுடன் சென்றிருப்பான் என சொல்லி தன் அம்மாவின் வாயை அடைக்கிறார்.

34
மனோஜை டீல் பண்ணிய கல்யாணி

கிரிஷ் விவகாரத்தில் அவனை மும்பைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்த ஜீவாவுக்கு செம டோஸ் கொடுக்கும் ரோகிணி, மனோஜிடமும் இந்த விஷயத்தை கைவிடுமாறு கூறுகிறார். இதனை வீட்டில் வந்து விஜயாவிடம் சொல்லும் மனோஜ், ரோகிணி தான் கிரிஷை மும்பைக்கு பார்சல் பண்ண விடாமல் தடுத்ததாக சொல்கிறார். பின்னர் மனோஜை தன்னுடைய பாணியில் டீல் செய்யும் ரோகிணி, தன்னுடைய உடம்பில் கல்யாணியின் ஆவி வந்துவிட்டதாக கூறி, அவனை எச்சரிக்கிறார். கிரிஷை எங்காவது அனுப்ப நினைத்தால் உன்னுடைய அம்மாவை கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார்.

44
அடுத்த ட்விஸ்ட் என்ன?

இதனால் வேறுவழியின்றி கிரிஷை வெளி மாநிலத்துக்கு அனுப்பும் முடிவை கைவிடுகிறார் மனோஜ். இதையடுத்து என்ன ஆகப்போகிறது? கிரிஷை தத்தெடுக்கும் முடிவில் மீனா உடன் சண்டை போட்டு மீண்டும் குடிகாரனாக முத்து மாறியதால் அவர்கள் இருவரும் பிரிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் கிரிஷை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் விஜயாவின் முயற்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் அவர் அடுத்தகட்டமாக என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்பது இனி வரும் எபிசோடில் தெரியவரும்.

Read more Photos on
click me!

Recommended Stories