எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்கிய புது பிசினஸை அடியோடு தீர்த்துக் கட்ட அன்புக்கரசியை ஏவிவிட்டுள்ளார் ஆதி குணசேகரன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, தன்னுடைய அக்காக்கள் நந்தினி மற்றும் ரேணுகா உடன் சேர்ந்து தமிழ் சோறு என்கிற ஃபுட் டிரக் உணவக பிசினஸை தொடங்குவதற்கான வேலைகளை செய்து வந்த நிலையில், அதற்கான லைசன்ஸ் வாங்கும் பணிகளின் போது, வீட்டுக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளிடம், இந்த வீடு ஆதி குணசேகரனுடையது என்றும், நாளை அவர் வந்து வழக்கு தொடர்ந்தால் உங்க வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்று கூறியதால், அந்த அதிகாரி குழப்பமடைந்து, லைசன்ஸ் வழங்கும் பணிகளை நிறுத்திவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
பிசினஸுக்கு லைசன்ஸ் வாங்கிய ஜனனி
பின்னர் இந்த விஷயத்தை சுமூகமாக முடிக்க, பணம் செலவாகும் என கேள்விப்பட்டதும், அதை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் ஜனனி முழித்துக் கொண்டிருக்க, விசாலாட்சி தன்னிடம் இருந்த 70 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுக்கிறார். இதையடுத்து இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்து லைசன்சையும் வாங்கி விடுகிறார் ஜனனி. இந்த விஷயம் தெரிந்த அறிவுக்கரசி, ஆதி குணசேகரனுக்கு போன் போட்டு, ஜனனி காசு கொடுத்து எல்லா வேலையையும் முடித்துவிட்டதாக கூறுகிறார். இதனால் அப்செட் ஆகும் ஆதி குணசேகரன், தன்னுடைய அடுத்த பிளானை சொல்வதாக போனை கட்பண்ணி விடுகிறார்.
34
சோசியல் மீடியாவில் குதித்த சிங்கப்பெண்கள்
பின்னர் வீட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் தனித்தனியாக சோசியல் மீடியாவில் அக்கவுண்ட் ஓபன் செய்து கொடுக்கும் தர்ஷினி, அதில் தினசரி பதிவுகளை போடுவதன் மூலம் நம்முடைய பிசினஸ் வளர்ச்சியடையும் என கூறுகிறார். இந்த விஷயம் கரிகாலன் மூலம் ஆதி குணசேகரனுக்கு தெரிய வருகிறது. சோசியல் மீடியாவில் நம்முடைய குடும்ப கெளரவம், வீட்டு மானம், மரியாதை எல்லாம் ஸ்டோரியாக போய்கிட்டு இருக்கு என சொல்கிறார். இப்படி ஜனனியின் நடவடிக்கையால் டென்ஷன் ஆகும் ஆதி குணசேகரன், இதற்கு முடிவுகட்ட முடிவெடுத்து அறிவுக்கரசிக்கு போன் போடுகிறார்.
லைசன்ஸ் கிடைத்தாலும் வண்டி இருந்தால் தானே பிசினஸ் தொடங்க முடியும் எனக் கூறி அந்த வண்டியை இரவோடு இரவாக கொளுத்திவிடுமாறு கூறுகிறார் குணசேகரன். அவரின் பேச்சைக் கேட்டு முல்லை அந்த வண்டியை தீ வைத்து எரிக்கிறார். தங்கள் வாழ்வாதாரத்தில் ஆதி குணசேகரன் கைவைத்திருப்பதால், அவரை பழிவாங்க ஆயத்தமாகிறார் ஜனனி. இதையடுத்து என்ன நடந்தது? ஆதி குணசேகரன் மீது அதிரடி ஆக்ஷனில் இறங்குவாரா ஜனனி? குணசேகரனுக்கு தூதுவிடும் அறிவுக்கரசியை வீட்டை விட்டு துரத்துவார்களா? என்பதை எல்லாம் இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.