மகள் இயக்கும் லால் சலாம் படத்துக்காக ‘மொய்தீன் பாய்’ ஆக மாறிய ரஜினிகாந்த் - ட்ரோல் செய்யப்படும் பர்ஸ்ட் லுக்

First Published | May 8, 2023, 9:40 AM IST

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.

ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, தற்போது தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... பயங்கர விபத்து... டிவைடரில் மோதிய கார் - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதாவுக்கு என்னாச்சு? பதறிப்போன ரசிகர்கள்

Tap to resize

லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் ஐஸ்வர்யா. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் முஸ்லீன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அவரது கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அவரின் தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக குறிப்பிட்டுள்ள படக்குழு அவரின் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளது. அதனைப் பார்த்து அப்செட் ஆன ரசிகர்கள் அந்த போஸ்டரை ட்ரோல் செய்து வருகின்றனர். மோசமாக எடிட் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கு ஃபேன் மேடு போஸ்டரே சூப்பராக இருக்கும் என விமர்சித்து வருகின்றனர். இதனால் படக்குழுவும் சற்று அப்செட் ஆகி உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் சாதிக்கு ‘நோ’ சொல்லி... பரியேறும் பெருமாள் பட நாயகி செய்த தரமான சம்பவம்

Latest Videos

click me!