சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா சுரேஷ். இவர் தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடல்கள் பாடி இருக்கிறார். கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ என்கிற பாடலை பாடியதும் ரக்ஷிதா தான்.
பிசியான பின்னணி பாடகியாக வலம் வரும் இவர், இசை நிகழ்ச்சிகளில் பாடுவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். பல்வேறு வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடி வரும் ரக்ஷிதா, அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி முடிந்து விமான நிலையம் திரும்பிக் கொண்டிருக்கும் போது அவர் சென்ற கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பாடகி ரக்ஷிதா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் சாதிக்கு ‘நோ’ சொல்லி... பரியேறும் பெருமாள் பட நாயகி செய்த தரமான சம்பவம்
அதில் அவர் கூறி இருப்பதாவது : “மலேசியாவில் உள்ள விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது நான் சென்ற கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நிகழ்ந்த, அந்த 10 வினாடிகளில், மொத்த வாழ்க்கையும் என் கண் முன்னே வந்து சென்றது. ஏர்பேக் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன், இல்லையெனில் நிலைமை மிகவும் மோசமாக இருந்திருக்கும்.
எனக்கு என்ன நடந்தது என்று நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன். நல்வாய்ப்பாக நான், எனது முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஓட்டுனர் மற்ற சக பயணிகளும் பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு லேசான உள் மற்றும் வெளிப்புற காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்” என குறிப்பிட்டுள்ளார். ரக்ஷிதாவின் இந்த பதிவைப் பார்த்து ஷாக் ஆன அவரது நண்பர்களும், ரசிகர்களும், அவர் விரைவில் நலம்பெற வேண்டுவதாக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தங்களது குழந்தைக்கு பெயர் வைத்த இயக்குநர் அட்லி - பிரியா தம்பதி... என்ன பெயர் தெரியுமா?