முதல்வர் மு க ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்கிற தலைப்பில் துவங்கப்பட்டுள்ள, புகைப்பட கண்காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் பார்வையிட்டனர்.
இவருடைய பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகம் முதல்வரின் பெருமையை எடுத்துக் கூறும் விதமாக அவர் அரசியலில் கால் பதித்தது முதல், தற்போது வரை மக்களின் போராட்டங்களில் கலந்து கொண்டது, சிறைச்சாலை சென்றது, போன்றவற்றை புகைப்படங்கள் ஆகவும் சிலைகளாகவும் வடித்து சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் புகைப்பட கண்காட்சியாக வைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக நடந்து வரின் இந்த கண்காட்சியை உலக நாயகன் கமலஹாசன் திறந்து வைத்தார்.