மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், கதாநாயகியாக மாறியவர் தான் கீர்த்தி சுரேஷ். மோகன் லால் நடித்த கீதாஞ்சலி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு மலையாள திரையுலக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து, தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான... இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாமல் தோல்வியை தழுவியது. இந்த படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த, ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. அதே நேரம், தனுஷுக்கு ஜோடியாக நடித்த தொடரி, விஜய்க்கு ஜோடியாக நடித்த பைரவா, போன்ற படங்கள் தோல்வியடைந்ததால் சில விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தது.
உள்ளாடை போடாமல்... மோசமான உடையில் திவ்யபாரதி வெளியிட்ட வீடியோ! எங்க ஊரு மியா என கலாய்க்கும் நெட்டிசன்கள்!
தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷை வைத்து, இயக்குனர் நாக் அஸ்வின்... தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் எடுத்திருந்த திரைப்படம், 'மகாநடி '.
இந்த படத்தை தொடர்ந்து, கதைக்கும்... கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் அப்படி இவர் நடித்து வெளியான படங்களும் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
சிறு வயதில் இருந்து இப்போது வரை, அக்கா ரேவதி சுரேஷுடன்... குறும்புத்தனத்தோடு எடுத்து கொண்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் ஷேர் செய்ய, ரசிகர்கள் பலருக்கும் கீர்த்தியின் அக்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருவதோடு, புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.