நடிகர் தனுஷுக்கும், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணமானது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த எதிர்பாரா அறிவிப்பு சமூக வலைதளங்களை அதிர வைத்தது. ரசிகர்கள் அனைவரும் ஏன் இந்த முடிவு, தயவு செய்து மீண்டும் சேர்ந்து விடுங்கள் என தனுஷுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் இவர்களது விவாகரத்து முடிவால் நடிகர் ரஜினி கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியும் ஒரு புறம் மும்முரமாக நடந்து வருகிறது. குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தனுஷும், ஐஸ்வர்யாவும் ஐதராபாத்தில் தான் உள்ளனர். இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவாகரத்து அறிவிப்பு வெளியாகி ஒரிரு வாரங்கள் ஆன நிலையில், தற்போது ரஜினி மற்றும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பிரபல சினிமா பைனான்சியரான அன்புச்செழியன் தனது மகளில் திருமண அழைப்பிதழை கொடுக்க ரஜினி வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் முகத்தில் பொலிவின்றி காட்சி தரும் ரஜினி, சோகத்தை மறைத்து சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.
அதேபோல் தனுஷும், தனது அண்ணன் செல்வராகவனின் குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. விவாகரத்து அறிவிப்புக்கு பின் வெளியான ரஜினி மற்றும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.