தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இவர் கைவசம் தமிழில், விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’, மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘கோல்டு’, தெலுங்கில் மோகன்ராஜா இயக்கும் ‘காட்ஃபாதர்’ போன்ற படங்கள் உள்ளன.
இதுதவிர இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் என்பவர் இயக்கும் O2 என்கிற புதிய படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது தனது காதலனுடன் சேர்ந்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிறுவனம் தற்போது கனெக்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், ஊர்க்குருவி, கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து வருகிறது.
6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். குல்பி போல் இருந்த நயன்தாராவா இது என கேட்கும் அளவுக்கு மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.