கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால், பாலிவுட் திரையுலகில் அமிதாப் பச்சன். தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த இரு பெரிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலக ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை.தூண்டியுள்ளது.
இந்த படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் பிக் பி என பாலிவுட் திரையுலகினரால் அழைக்கப்படும், அமிதாப்பச்சனும் நடிக்க உள்ளாராம்.
இப்போது, இவர்கள் இருவரும் சுமார் 32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் வெள்ளித்திரையில் இணைந்து நடிக்க உள்ளனர். தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க தற்போது பேச்சு வார்த்தை மும்முரமாக நடந்து வருவதாகவும், விரைவில் இது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகலாம் என நம்பப்படுகிறது.