நீடா அம்பானி துவங்கியுள்ள கலாச்சார மையம், மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் பிரம்மாண்டமான திறக்கப்பட்டது.
இதனை திறப்பதற்கான வேலைகள் 3 நாட்களாகவே மிகவும் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், நேற்று நடந்த திறப்பு விழாவில், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் முதல் கொண்டு பலர் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாகவே இந்த, கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதே போல் இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் வெளிப்படுத்தும் இடமாகவும், உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்காக இடமாகவும் இது திகழும் என கூறியுள்ளார்.
மேலும் இங்கு 2,000 இருக்கைகள் கொண்ட பிரமாண்ட திரையரங்கு, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட 250 இருக்கைகள் கொண்ட ஸ்டுடியோ தியேட்டர், மற்றும் டைனமிக் 125-இருக்கை கொண்ட கியூப். ஆகியவை இடம்பெற்றுள்ளது .
நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியின் பிரமாண்ட துவக்க விழாவில், முகேஷ் அம்பானி பிள்ளைகள், இஷா அம்பானி, அவரின் கணவர், மகன்கள் ஆகாஷ் அம்பானி ஆனந்த் அம்பானி ஆகியோர் தங்களின் மனைவிகளோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருகான் குடும்பத்தினர், ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், ரித்திக் ரோஷன், ப்ரியங்கா சோப்ரா, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
அதே போல் இந்திய உடைகளில் ஃபேஷன் ஷோ, இந்தியாவில் தாக்கம் செலுத்திய சமகால கலைஞர்களின் படைப்புகளைக் கொண்டாடும் சங்கமம் கலைக் கண்காட்சிகள் போன்றவை வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கு 199 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.