போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த இவர் கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் முறையில் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் உலகம் என பெயரும் சூட்டி உள்ளனர்.