கன்னடத்தில் ஷிவ ராஜ்குமார் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் முஃப்டி. இப்படத்தை முதலில் அப்படியே தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதில் சிம்பு, ஷிவ ராஜ்குமார் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் கடந்த 2019-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. முஃப்டி படத்தை இயக்கிய நாரதன் தான் அதன் தமிழ் ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமானார்.