இயக்குனர் பாலா முதலில், நடிகர் சூர்யாவை வைத்து எடுக்க திட்டமிட்டிருந்த திரைப்படம் தான் 'வணங்கான்'. இப்படத்தை நடிகர் சூர்யாவே, தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்க இருந்தார். ஆனால் பாலா இஷ்டத்துக்கு காசை செலவு செய்து வருவதாகவும், இன்னும் ஒரு சில பிரச்சனைகள் தலை தூக்கியதாலும், இப்படத்தில் இருந்து நாசுக்காக வெளியேறினார் சூர்யா. மேலும் இயக்குனர் பாலா மற்றும் சூர்யா தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.