இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜப்பானில் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதற்கு காரணம் அவர் நடிப்பில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம் தான். இப்படம் ஜப்பானில் ரிலீசாகி அங்கு வசூலையும் வாரிக்குவித்தது. அந்த சமயத்திலேயே ரூ.23.5 கோடி வசூலித்து இருந்தது இப்படம்.
இந்நிலையில், தற்போது ரஜினியின் முத்து படம் 24 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) திரைப்படம் தான் ரஜினியின் முத்து பட சாதனையை முறியடித்து உள்ளது.