ராம்சரண் முதல் பிரபாஸ் வரை... வாரிசு படத்தின் கதை கேட்டு நடிக்க மறுத்த முன்னணி தெலுங்கு ஹீரோஸ் - காரணம் என்ன?

First Published | Dec 17, 2022, 11:20 AM IST

வாரிசு படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் இல்லை என்றும், அது தெலுங்கு நடிகர்களுக்காக எழுதப்பட்ட கதை என்றும் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது வாரிசு திரைப்படம் தான். விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். இப்படத்தை டோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தயாரித்து உள்ளார். வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைகாண உள்ளது.

வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீசாக உள்ளது. இதனால் இருவருக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 நடிகராக இருப்பதனால் வாரிசு படத்திற்கு அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யக்கோரி உதயநிதியிடம் முறையிட உள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் கல்லாகட்டியதா அவதார் 2 ? - முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Tap to resize

அவரின் இந்த பேச்சைக் கேட்டு கோபமடைந்த அஜித் ரசிகர்கள் தில் ராஜுவை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வாரிசு படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் இல்லை என்றும், அது தெலுங்கு நடிகர்களுக்காக எழுதப்பட்ட கதை என்றும் தில் ராஜு கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதன்படி வாரிசு படத்தின் கதையில் நடிக்க அவர்கள் முதலில் அணுகியது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை தானாம். அவரால் நடிக்க முடியாமல் போனதால் பின்னர் ராம்சரண், அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்ததன் காரணமாக இதில் நடிக்க முடியாமல் போனதால் தான் இறுதியாக விஜய்யை இப்படத்தில் நடிக்க வைத்தோம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... தளபதி அதை தான் பண்ண கூடாதுனு சொன்னார்..! அடங்காத ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர் வைரல்..!

Latest Videos

click me!