இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அதில் நடித்த நடிகர்கள் தான். வரலாற்று கதை அம்சம் கொண்ட இப்படத்தில் கொமரம் பீமாக ஜூனியர் என்டிஆரும், சீதாராம ராஜூவாக ராம்சரணும் நடித்திருந்தனர். இது தவிர நடிகைகள் ஆலியா பட், ஸ்ரேயா சரண், நடிகர்கள் அஜய் தேவ்கன், சமுத்திரகனி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் அவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின.
இதையும் படியுங்கள்... ஜப்பானில் மாஸ்காட்டும் ஆர் ஆர் ஆர் டீம்.. கையில் ரோஜாவுடன் சுற்றி வரும் நட்சத்திரங்கள்