அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். அதுமட்டுமின்றி சமந்தா இப்படத்தில் இடம்பெற்ற ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி அசர வைத்தார்.
பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை காட்டிலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ‘புஷ்பா தி ரூல்’ என பெயரிட்டுள்ளனர்.