தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு, கம்பேக் கொடுக்க உள்ள திரைப்படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து பிக்பாஸ் பிரபலம் ஷிவானி, நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடிகை சிவாங்கி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.