வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் வி.ஜே.அர்ச்சனா. மிகக் குறுகிய காலத்தில் தன் நடிப்புத் திறமையால் பல ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா 2019ல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் கலைப் பயணத்தைத் தொடங்கியவர்.
அதனைத் தொடர்ந்து ‘லவ் இன்சூரன்ஸ்’, ‘ட்ரூத் ஆர் டேர்’ ஆகிய குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் “எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி” என்ற இணையத் தொடரிலும் (web series ) நடித்துள்ளார்.
இவர் தன்னைப்பற்றிக் கூறும்பொழுது நான் ஒரு தமிழ்ப் பெண். இயக்குநர்கள் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு சிறப்பான முறையில் நடிப்பை வெளிப்படுத்துவதால் நான் இயக்கு நர்களுக்குப் பிடித்த நடிகையாகத் திகழ்கிறேன் என்றார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய பிற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பேன் என்று மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.
இந்நிலையில் இவர் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக, ஊதா நிற சேலையில்... வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.