அஜித்திற்கு பிரமிக்க வைக்கும் பேனர்கள்! அலகு குத்தி கிரேன் மூலம் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம்! வைரல் போட்டோஸ்.!

Published : Jan 10, 2023, 07:45 PM IST

'துணிவு' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில்... அஜித்தின் ரசிகர்கள் பெரிய பெரிய பேனர்கள் வைத்து அட்ராசிட்டி புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாகி வருகிறது.   

PREV
16
அஜித்திற்கு பிரமிக்க வைக்கும் பேனர்கள்! அலகு குத்தி கிரேன் மூலம் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம்! வைரல் போட்டோஸ்.!

அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் நாளை உலகம் முழுவதும், மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித் மூன்றாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்து நடித்துள்ளார்.

26

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய இரண்டு படங்களுமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதால்... 'துணிவு' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மனைவி சங்கீதாவுடன் வாரிசு படம் பார்த்த விஜய்! தாமதம் ஆனதால் பட குழுவினர் மீது கோவப்பட்டாரா தளபதி!

36

நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள, 'துணிவு' மற்றும் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களையுமே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் வரவேற்க காத்திருக்கின்றனர்.

46

மேலும் திரையரங்குகளில் பெரிய பெரிய கட்டவுகள் மற்றும் பட்டாசு, மேல தாளங்கள் முழங்க இரண்டு படங்களும் வரவேற்கப்பட உள்ளது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் தல மீது உள்ள அன்பால் அதிரடியாக பல சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

ஒத்த செருப்புக்காக ஆஸ்கரில் 20 லட்சத்தை இழந்தேன்.! ஆனால் இரவின் நிழல்? - ஆஸ்கர் அரசியலை பேசிய பார்த்திபன்!

56

சுமார் 30 அடி கட் அவுட்டுக்கு அஜித் ரசிகர் ஒருவர் முதுகில் அலகு குத்திக்கொண்டு, கிரேன் மூலம் மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரம் ஆகி வருகிறது.

66

அதேபோல் சுமார் 7 லட்சம் செலவில், அஜித்துக்கு 30 அடிக்கு மேல் கட்டவுட் வைத்து முழுவதும் பூமாலையால் அலங்கரித்துள்ளனர். பிரமிக்க வைக்கும் உயரத்தில், அஜித் ரசிகர்கள் வைத்துள்ள கட்டவுகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தான் வேறு லெவலுக்கு பார்க்கப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கிய 'இனியா' சீரியல் நடிகை ஆல்யா மானசா! கால் எலும்பு முறிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories