தங்கலான், டிமாண்டி காலனி 2 படங்களை விட படுமோசமான வசூல்... குரூப்புல டூப் ஆக மாறிய ரகு தாத்தா!

Published : Aug 18, 2024, 10:56 AM IST

சுதந்திர தினத்தன்று வெளியான விக்ரமின் தங்கலான், அருள்நிதியின் டிமாண்டி காலனி 2, கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா போன்ற படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ.

PREV
15
தங்கலான், டிமாண்டி காலனி 2 படங்களை விட படுமோசமான வசூல்... குரூப்புல டூப் ஆக மாறிய ரகு தாத்தா!
Box Office collection

சுதந்திர தினத்தன்று சியான் விக்ரம் நடித்த தங்கலான், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த டிமாண்டி காலனி 2, கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த ரகு தாத்தா ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இதில் தங்கலான் படத்தை பா.இரஞ்சித் இயக்கி இருந்தார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இப்படம் உலகளவில் 2 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.

25
Keerthy Suresh Raghu Thatha

அதேபோல் மற்றொரு படமான டிமாண்டி காலனி 2 திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தின் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த அருள் நிதி தான் இப்படத்திலும் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்த படங்களுடன் போட்டி போட்டு ரிலீஸ் ஆன மற்றொரு படமான ரகு தாத்தாவை சுமன் குமார் இயக்கி இருந்தார். இது இந்தி திணிப்பை எதிர்க்கும் படமாக உருவாகி இருந்தது.

இதையும் படியுங்கள்... மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததும் பிரிந்த உயிர்... நடிகர் கிங்காங்கின் தாயார் காலமானார்

35
Thangalaan Box Office Collection

இந்த மூன்று படங்களில் டிமாண்டி காலனி திரைப்படம் தான் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்களும், ரகு தாத்தா படத்திற்கு படு மோசமான விமர்சனங்களும் கிடைத்தன. இது அப்படத்தின் வசூலிலும் எதிரொலித்தது. தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்களில் உலகளவில் ரூ.60 கோடி வசூலித்து உள்ளது. இருந்தாலும் அப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் சரிந்த வண்ணம் உள்ளது.

45
Demonte Colony 2 Box Office Collection

மறுபுறம் வசூலில் பட்டைய கிளப்பி வரும் டிமாண்டி காலனி 2 திரைப்படம் வசூலில் ஜெட் வேகத்தில் முன்னேறி வருகிறது. இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. நேற்று அதிகபட்சமாக ரூ.4 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது டிமாண்டி காலனி 2 திரைப்படம்.

55
Raghu Thatha Box Office Collection

சுதந்திர தினத்தன்று வெளியான படங்களில் படுமோசமாக வசூலித்த படம் என்றால் அது கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா. அப்படம் மூன்று நாட்களில் வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாம். இப்படம் வசூலில் கோடிகளை தொடுவதே டவுட்டு தான் என கூறப்படுகிறது. இப்படம் படுதோல்வியை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர்... எம்.ஜி.ஆர் பற்றி ஜெயலலிதா அளித்த பிளாஷ்பேக் பேட்டி

click me!

Recommended Stories