தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையில் தற்போது தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே யுவன் சங்கர் ராஜா மீது போலீசில் பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது.
24
music director Yuvan Shankar Raja
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வந்துள்ளார். அந்த வீட்டுக்கு வாடகை கொடுக்காமல் இருந்து வந்த யுவன், 20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அஜ்மத் பேகம் வாடகை கேட்கும் போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா வாடகை தர மறுத்து பேசியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி அண்மையில் வீட்டு உரிமையாளருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை காலி செய்துவிட்டு யுவன் சங்கர் ராஜா காலி செய்திருக்கிறார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வாடகை பாக்கி ரூ.20 லட்சத்தை கொடுக்காமல் வீட்டை காலி செய்துவிட்டு சென்ற யுவன் சங்கர் ராஜா மீது வீட்டின் உரிமையாளர் அஜ்மத் பேகமின் சகோதரர் முகமது ஜாவித் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
44
yuvan shankar Raja in trouble
தங்களுக்கு சேர வேண்டிய வாடகை பணத்தை வாங்கித் தரக்கோரியும், மற்றும் சேதத்துக்கான இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் விஜய் போன்ற முன்னணி நடிகரின் படத்திற்கு இசையமைத்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் யுவன் சங்கர் ராஜாவிடம் வாடகை கொடுக்க கூடவா காசில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.