ஆஸ்கார் மட்டுமல்ல, தேசிய விருதிலும் நான் தான் கிங்! அதிக தேசிய விருதுகளை பெற்ற ஒற்றை தமிழன்

First Published | Aug 17, 2024, 10:54 PM IST

70வது தேசிய விருதுகளை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதுவரை அதிக தேசிய விருதுகளை வென்றவர் யார் தெரியுமா...? எந்த பிரிவில் அவருக்கு இந்த விருதுகள் கிடைத்தன தெரியுமா...? 

சமீபத்தில் மத்திய அரசு 70வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தது. இதில் தமிழ், கன்னடம், மலையாள சினிமாக்கள் விருதுகளை அறுவடை செய்துள்ள நிலையில் இதுவரை இந்திய திரையுலகில் அதிக விருதுகளை வென்றவர் யார் தெரியுமா...? 

அதிக விருதுகளை வென்றவர் வேறு யாருமல்ல, ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தான். ஆம்.. இந்திய திரைப்பட வரலாற்றில் அதிக தேசிய விருதுகளை வென்ற இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் சாதனை படைத்துள்ளார். இந்த முறையும் ரகுமான் தேசிய விருதை வென்றுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான  பொன்னியின் செல்வன் 1 படத்தின் சிறந்த பின்னணி இசைக்கான விருது ஏ.ஆர். ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos


இதன் மூலம் இதுவரை அதிக தேசிய விருதுகளை வென்ற இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை ஏ.ஆர். ரகுமான் மொத்தம் 7 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.  முதன்முறையாக 1992 ஆம் ஆண்டு ரோஜா  படத்திற்காக சிறந்த இசைக்கான  தேசிய விருதை வென்றார். 1996 இல் மின்சார கனவு படத்திற்காகவும், 2001ல் லகான் படத்திற்காகவும், 2002ல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காகவும், 2007 இல் சிலியன் படத்திற்காகவும், 2017 இல் மாம் படத்திற்காகவும் தேசிய விருதுகளை வென்றார் ஏ.ஆர். ரகுமான். தற்போது 2022 ஆம் ஆண்டிற்கான பொன்னியின் செல்வன் படத்திற்காக 7வது முறையாக தேசிய விருதை வென்றுள்ளார். 
 

ஏ.ஆர். ரகுமான்

ரகுமான் வென்ற விருதுகளில் இரண்டு இந்தி படங்கள்  இருக்க, ஐந்து  தமிழ் படங்களுக்கு ரகுமான் தேசிய விருதை வென்றுள்ளார்.  இவ்வாறு இதுவரை அதிகபட்சமாக 7 தேசிய விருதுகளை வென்ற இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் சாதனை படைத்துள்ளார். 
 

அடுத்த இடத்தில் இளையராஜா, அமிதாப் பச்சன், விஷால் பரத்வாஜ் ஆகியோர் உள்ளனர். இளையராஜா  5 முறை தேசிய விருதை வென்றுள்ளார்.. அமிதாப் 4 முறை  விஷால் பரத்வாஜ் 4 முறை தேசிய விருதை வென்றுள்ளனர். கமல்ஹாசன், மம்மூட்டி, அஜய் தேவ்கன் போன்ற நட்சத்திரங்கள் மூன்று முறை தேசிய விருதை வென்றுள்ளனர். டோலிவுட்டில் இருந்து அல்லு அர்ஜுன் முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். 
 

click me!