சீதாவுடனான திருமணம் - விவாகரத்து? சீரியல் நடிகர் சதீஷ் விளக்கம்!

First Published | Aug 17, 2024, 10:51 PM IST

நடிகை சீதாவை, பிரபல சீரியல் நடிகர் சதீஷ் திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் கடந்த சில வருடங்களாகவே சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில், இது குறித்து சதீஷ் முதல் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்.
 

80-பது மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சீதா. 'ஆண்பாவம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சீதா, பின்னர் விஜயகாந்த், ரஜினிகாந்த், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பெரும்பாலும் கிராமத்து கதைக்களத்தில் ஹீரோயினாக நடித்து வந்த சீதா, 'புதிய பாதை' திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனுடன் நடித்த போது, இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் பின்னர் திருமணத்தில் முடிந்தது.

பார்த்திபனை சீதா காதலித்தது, அவரின் பெற்றோருக்கு பிடிக்காத நிலையில் தன்னுடைய குடும்பத்தை எதிர்த்து காதலனை கரம் பிடித்தார். சினிமாவுக்கு பின்னர் மொத்தமாக திரையுலகில் இருந்து விலகிய இவர், மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்னர் அவ்வபோது சீரியல் மற்றும் ஒரு சில படங்களில் தலை காட்டத் தொடங்கினார்.

'ராயன்' OTT ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tap to resize

மேலும் சீதா - பார்த்திபன் ஜோடி பிரிந்ததற்கு முக்கிய காரணம், நடிகை சீதாவுக்கு சீரியல் நடிகர் சதீஷ் உடன் ஏற்பட்ட பழக்கம் என்றே கூறப்பட்டது. இருவரும் ஒரே சீரியலில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தால் தான் பார்த்திபனிடம் இருந்து பிறந்து பின்னர் சீதா, சதீஷை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் சதீஷ் சில வருடங்களிலேயே, சீதாவின் சொத்துக்களை வாங்கிக்கொண்டு அவரை ஏமாற்றி விட்டதாகவும், சீதாவை தன்னந்தனியாக விட்டு சென்றதாகவும் பல தகவல்கள் உலா வந்தன. இது போன்ற தகவல்களுக்கு இதுவரை சீதா வெளிப்படையாக எந்த பதிலையும் சொல்லாத நிலையில், முதல் முறையாக சீரியல் நடிகர் சதீஷ் வெளிப்படையாக விளக்கம் கொடுத்துள்ளார்.

Breaking: பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி!

சீதாவுடனான உறவு குறித்து பேசியுள்ள நடிகர் சதீஷ், கடந்த சில வருடங்களாகவே சீதாவை நான் இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக  ஒரு தகவல் பரவி வருவதை கேட்டு வருகிறேன். ஆனால் இந்த தகவல் உண்மையானது அல்ல. எங்கள் இருவருக்கும் திருமணமெல்லாம் நடக்கவே இல்லை. எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணோடு திருமணம் நடந்து விட்டது. நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். எங்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறாள். குழந்தையின் விருப்பம் போலவே அவர் அவருடைய அம்மா உடன்தான் வசித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் சீதா பார்த்திபன் பிரிந்ததற்கும், எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நான் சீதாவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக வெளியாகும் தகவலும், அவருடைய சொத்துக்களை ஏமாற்றி விட்டேன் என சொல்லும் தகவலிலும் இந்த உண்மையும் கிடையாது.  உண்மையை சொல்லப்போனால். நானும் சீதாவும் பல வருடங்களாக ஒரு நல்ல நண்பர்கள். சீதாவிடம் எப்போதும் போல், அவரை ஒரு தோழியாக நினைத்து இப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய வீட்டில் நடக்கும் குடும்ப நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வார் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

50 கோடி சம்பளம்... ராஜபோக வாழ்க்கை வாழும் இயக்குனர் ஷங்கரின் Net Worth எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!