Raayan Movie:
நடிப்பு அசுரன் என பெயர் எடுத்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகர் என்பதை தாண்டி... தன்னை ஒரு தரமான இயக்குனர் என ஏற்கனவே பா பாண்டி படத்தில் நிரூபித்த நிலையில், தன்னுடைய 50-ஆவது படத்தின் மூலம் 'வடசென்னை' கதைக்களம் கொண்ட படங்களை இயக்குவதில் கிங் என நிரூபித்துள்ளார்.
Raayan Movie
பா.பாண்டி படத்திற்கு பின்னர் சுமார் 7 வருடங்கள் திரைப்பட இயக்கத்தின் பக்கமே செல்லாமல் இருந்த தனுஷை மீண்டும் இயக்கத்தில் இறங்க வைத்தது இவரின் 50-வது படம் தான். தன்னுடைய 50-வது படத்தை இயக்கும் வாய்ப்பை யாருக்கும் விட்டு கொடுக்க மனம் இன்றி தான் தனுஷ் 'ராயன்' படத்தை இயக்கியதாக கூறப்படுகிறது.
Breaking: பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி!
Dhanush Raayan Characterisation:
அதே சமயம், 'ராயன்' படத்தில் பர்பாமென்சை வெளிப்படுத்த கூடிய காட்சிகளை இளம் நடிகர்களான சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், போன்ற நடிகர்களுக்கு விட்டு கொடுத்துவிட்டு... சைலெண்டானா தனுஷாக மொட்டையோடு பார்வையால் மிரட்டி இருந்தார். இந்த படத்தின் கதைக்களம் மற்றும் ஆக்ஷன் காட்சிகள், செண்டிமெண்ட் போன்றவை நல்ல வரவேப்பை பெற்ற போதிலும், இப்படத்தின் கிளைமேக்ஸ் மட்டும் நெருடலாக இருந்ததாக பலர் தெரிவித்து வந்தனர்.