நடிகை சினேகாவின் வீட்டு வரலட்சுமி நோம்பு புகைப்படங்கள்!

First Published | Aug 17, 2024, 8:03 PM IST

நடிகை சினேகா ஒவ்வொரு வருடமும், வரலட்சுமி நோம்பை தவறாமல் கடைபிடித்து வரும் நிலையில், இந்த ஆண்டு வரலட்சுமி நோம்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனிதா விஜயகுமார் பகிர்ந்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 

Sneha Varalaxmi Nombu Photos

திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்ட பின்னரும், தமிழ் சினிமாவில் எவர் கிரீன் நாயகியாக இருக்கும் சினேகா, நவ நாகரீக மங்கையாக உடை அணிந்து காணப்பட்டாலும், குடும்பம் என வந்துவிட்டால் குத்துவிளக்காக மாறி விடுவார்.

Sneha Varalaxmi Nombu Photos

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பின்னர், ஒவ்வொரு வருடமும்... தன்னுடைய கணவரின் ஆயுளுக்காகவும், தீர்க்க சுமங்கலி வரத்திற்காகவும், மகாலட்சுமியை நோம்பிருந்து வழிபட்டு வருகிறார்.

50 கோடி சம்பளம்... ராஜபோக வாழ்க்கை வாழும் இயக்குனர் ஷங்கரின் Net Worth எவ்வளவு தெரியுமா?

Tap to resize

Sneha Varalaxmi Nombu Photos

அந்த வகையில் இந்த ஆண்டும், சினேகா தன்னுடைய குடும்பத்தினர் மற்றும், தோழிகளுடன் சேர்ந்து இந்த ஆண்டு வரலட்சுமி பூஜையை சிறப்பித்துள்ளார். 

Sneha Varalaxmi Nombu Photos

இவர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலட்சுமி பூஜையில், அனிதா விஜயகுமார், ப்ரீத்தா, சினேகாவின் சகோதரி சங்கீதா, சினேகாவின் அம்மா, கணவர் பிரசன்னா, மற்றும் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

'GOAT' ட்ரைலரில் இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?

Sneha Varalaxmi Nombu Photos

சினேகா வீட்டு வரலட்சுமி நோம்பில் கலந்து கொண்ட புகைப்படங்களை தற்போது... விஜயகுமாரின் மகன் அனிதா வெளியிட்டு, சினேகாவை அவரின் உண்மையான பெயரான 'சுஹாசினி' என குறிப்பிட்டு கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

Sneha Varalaxmi Nombu Photos

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. சினேகாவும் மங்களகரமாக புடவை கட்டிக்கொண்டு, தன்னுடைய குழந்தைகளுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி 'மகாநதி' சீரியல் ஹீரோ ருத்ரன் பிரவீனுக்கு குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்து!

Latest Videos

click me!