தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் கிங்காங். இவர் கடந்த 1988-ம் ஆண்டு வெளிவந்த நெத்தியடி படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அப்போது அவருக்கு வயது 17. இதைத்தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய கிங்காங், நடனத்திலும் கில்லாடியாக இருந்து வந்தார். இவரின் நடன அசைவுகள் பெரிதும் ரசிக்கப்பட்டன. அதன்பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவில் தவித்து வந்தார் கிங்காங்.
24
comedy actor king kong
அந்த சமயத்தில் ஊடகங்களிலும் அதுதொடர்பான செய்தி வெளியானதை அடுத்து வடிவேலு உடன் இணைந்து போக்கிரி படத்தில் கம்பேக் கொடுத்தார். அப்படத்தில் தண்ணி லாரி ஓட்டுநராக வரும் இவர் வடிவேலு உடன் சேர்ந்து செய்யும் காமெடி அட்ராசிட்டியை பார்த்து சிரிக்காத ஆளே இல்லை. அந்த அளவுக்கு அப்படம் கிங்காங்கிற்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்பை பெற்றார் கிங்காங்.
இதனிடையே பாலிவுட்டில் இருந்து கிங்காங்குக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. அதுவும் தன்னுடைய முதல் படத்திலேயே ஷாருக்கான் உடன் இணைந்து நடித்தார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு குட்டி வேடத்தில் நடித்திருந்தார் கிங்காங். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில், நடிகர் கிங்காங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வந்த நிலையில், அவர் தாய் மரணமடைந்தது கிங்காங்கை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
44
king kong with his mother kasi ammal
இன்று அதிகாலை 12.30 மணிக்கு கிங்காங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அவரது தாய் காசியம்மாள், சற்று நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து இருக்கிறார். தனது பிறந்தநாள் அன்றே தன் தாய் இறந்ததால் நடிகர் கிங்காங் மிகுந்த சோகத்தில் உள்ளாராம். அவருக்கு, உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.