Raghava Lawrence turns his own House into a school : இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தான் முதல் முறையாக கட்டிய வீட்டை இப்போது பள்ளிக் கூடமாக மாற்ற இருப்பதாக கூறியுள்ளார்.
முதல் முறையாக கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக ஆரம்பித்து இயக்குநர், இசையமைப்பாளர், நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். பேய் தொடர்பான கதைகளுக்கு பெயர் பெற்றவர். தொடர்ந்து முனி, கஞ்சனா 2, காஞ்சனா 3 என்று த்ரில்லர் படங்களில் நடித்துள்ளார். தற்போது காஞ்சா 4 படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி சினிமா தவிர்த்து தன்னால் முடிந்தளவிற்கு லாரன்ஸ் டிரஸ்ட் மூலமாக ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார்.
24
வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ்
இந்த நிலையில் தான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அதில், காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. எப்போது படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினால், அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல காரியத்திற்கு எடுத்து வைத்துக் கொள்வேன். குரூப் டான்ஸராக இருக்கும் போது வாங்கிய சம்பளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மிச்சப்படுத்தி அதனை அம்மாவிடம் கொடுத்து அப்படி வந்த பணத்தில் வாங்கிய நிலத்தில் கட்டிய வீடு தான் இந்த வீடு.
34
காஞ்சனா 4 படப்பிடிப்பை தொடங்கிய ராகவா லாரன்ஸ்
முதல் முறையாக நான் கட்டிய வீடு. இந்த வீட்டை பசங்களுக்கு கொடுத்துவிட்டு நாம் வாடகை வீட்டிற்கு சென்றுவிடலாமா என்று அம்மாவிடம் கேட்டு அப்படி நாங்கள் கொடுத்த இந்த வீட்டை இப்போது நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தப் போகிறோம். 20 வருடங்களுக்கு முன்பு கொடுத்த இந்த வீட்டை வந்து பார்க்கும் போது ஒரு விதமான உணர்வு தோன்றுகிறது. எத்தனை பசங்க, இங்கு படித்தார்கள், சாப்பிட்டார்கள், இலவசமாக நாம் என்னென்னவோ கொடுக்கிறோம்.
44
ராகவா லாரன்ஸ் வீடு
அதோடு கல்வியை இலவசமாக கொடுப்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் நான் கட்டிய இந்த வீட்டை கொஞ்சம் மாற்றம் செய்து இலவச கல்வி கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்காக இந்த வீட்டில் நான் வளர்த்த பெண் இப்போது டீச்சராகியிருக்கிறார்கள். இப்போ அவர்கள் தான் நான் கட்டப் போகும் பள்ளியின் முதல் டீச்சர். காஞ்சனா 4 படத்திற்கு அட்வான்ஸ் வாங்கி இந்த வீட்டை தரமான கல்வி கொடுக்கும் ஒரு பள்ளிக்கூடமாக மாற்றப் போகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.