Joy Crizildaa Mother Tearful Talk about Madhampatty Rangaraj : என்னுடைய மகளை அடி வெளுத்துவிடுவான் என்றும் அவருக்கு முகம் வீங்கி காது கேட்காமல் போய்விட்டது என்றும் ஜாய் கிரிசில்டாவின் அம்மா மன வேதனையுடன் கூறியுள்ளார்.
என் மகளை அடி வெளுத்து விடுவான் மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜின் 2ஆவது மனைவியான ஜாய் கிரிசில்டா தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே முதல் மனைவி இருக்கும் போது மாதம்பட்டி ரங்கராஜை ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின் போது ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தள பக்கங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால், இந்த திருமணம் தொடர்பாகவே, ஜாய் கிரிசில்டா பற்றியோ மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரையில் ஒரு முறை கூட வாய் திறந்து பேசவில்லை.
37
ஜாய் கிரிசில்டாவின் அம்மா
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாய் கிரிசில்டா சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.
47
குக் வித் கோமாளி சீசன் 6 மாதம்பட்டி ரங்கராஜ்
இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்-தான் தந்தை, தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும் கருவை கலைக்கும் படி வற்பறுத்தி அடித்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
57
மாதம்பட்டி ரங்கராஜ் கொடுமைக்காரன்
அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது தனது மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் சற்று சைலண்டாக இருந்த ஜாய் கிரிசில்டா தனது மன வேதனையை வெளிப்படுத்து விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: "பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்." தர்மம் ஜெயிக்கும் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் முதல் முறையாக அவர் சிவசங்கரி டாக்ஸிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜிற்கும் திருமணம் நடந்தது அவரது முதல் மனைவியான ஸ்ருதி பிரியாவிற்கு நன்கு தெரியும். அவருக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. நாங்கள் இருவரும் ஒன்றரை வருடங்களாக இருந்து வரும் நிலையில் ஏன் அவர் எந்த பிரச்சனையும் செய்யவில்லை. அவர் மட்டும் பிரச்சனை செய்திருந்தால் இன்று என்னுடைய வாழ்க்கை இவ்வளவு பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் பதில் சொல்லுவாங்க, ஸ்ருதி பிரியா பதில் சொல்லுவாங்களா? என்றெல்லாம் சரிமாரியாக கேள்விகள் எழுப்பி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.
77
ஜாய் கிரிசில்டாவின் அம்மா பேட்டி
இந்த நிலையில் தான் இப்போது ஜாய் கிரிசில்டாவிற்கு பதிலாக அவரது அம்மா பேசியிருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய மகளை அடி வெளுத்துவிடுவான் என்றும் அவருக்கு முகம் வீங்கி காது கேட்காமல் போய்விட்டது என்றும் ஜாய் கிரிசில்டாவின் அம்மா மன வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், ஒருநாள் கூட நான் அடித்தது இல்லை. ஆனால், அவன் என்னுடைய மகளை அடித்து துன்புறுத்தியிருக்கிறான். மேலும், குழந்தை கருவை கலைக்க சொல்லி அடிச்சு கொடுமைப்படுத்தியிருக்கான் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.