Revathi Making First Night Arrangements : தங்கை துர்காவிற்கு மட்டும் முதலிரவு நடக்கும் நிலையில் தனக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடக்க வேண்டும் என்று ரேவதி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
Revathi Making First Night Arrangements : கார்த்திகை தீபம் 2 சீரியலில் ரேவதி தனக்கு முதலிரவு நடக்க வேண்டும் என்பதற்காக அதற்கான ஏற்பாடுகளை தானாகவே செய்துள்ளார். அக்கா ரோகிணி கர்ப்பமாக இருக்கும் நிலையில், தங்கை துர்கா மற்றும் நவீன் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இப்போது அவர்களுக்கு முதலிரவு நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ரேவதி தான் செய்தார்.
கார்த்திக்கிற்கு காதல் வலை – கார்த்திகை தீபம் 2 இன்றைய அப்டேட்!
இந்த நிலையில் தான் தனக்கும் முதலிரவு நடக்க வேண்டும் என்பதற்காக ரேவதி தனது அறையையும் முதலிரவுக்கான அறையாக மாற்றுகிறார். ஏற்கனவே வீட்டை சிவனாண்டி எழுதி வாங்கிவிட்டான் என்ற கோபத்தில் இருக்கும் கார்த்திக்கிற்கு ரேவதியின் செயல் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிறது. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் கார்த்திக்கின் மனநிலை இப்போது தனது பாட்டி மற்றும் அத்தையின் குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும்.
36
மேஜிக் பேனாவால் வீட்டை எழுதி வாங்கிய காளியம்மாள்
அதுமட்டுமின்றி பாட்டி மீதான கொலை குற்றத்தை நீக்க வேண்டும். இதற்கு அந்த கான்ஸ்டபிள் செல்போனை கண்டுபிடிக்க வேண்டும். இப்படியான நிலையில் இப்போது சிவனாண்டி மற்றும் காளியம்மாள் விரித்த வலையில் சாமுண்டீஸ்வரி வசமாக சிக்கிக் கொண்டாள். `எப்படி என்றால் அவரது வீட்டை சிவனாண்டி பெயருக்கு எழுதி வாங்க வேண்டும்.
இதற்காக நேரிடையாக சென்று உன்னுடைய வீட்டை எனக்கு எழுதி கொடு என்று கேட்டால் தரமாட்டார். அதனால் பெண்களுக்கான டிரஸ்ட் நடத்துகிறோம் என்ற பெயரில் இருவரை அனுப்பி சாமுண்டீஸ்வரியின் இடத்தை எழுதி வாங்குகின்றனர். அப்படி எழுதி வாங்கும் பத்திரத்தில் முதலில் உண்மையான இடத்தை மேஜிக் பேனாவால் எழுதி சாமுண்டீஸ்வரியிடம் கையெழுத்து வாங்குகின்றனர்.
46
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு
அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் அந்த மேஜிக் பேனாவால் எழுதிய எழுத்து மறைந்து போக உடனே அவர், சாமுண்டீஸ்வரியின் வீட்டை சிவனாண்டி பெயருக்கு மாற்றி எழுதிவிட்டார். இதைத் தொடர்ந்து, சந்திரகலா சிவனாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் டாக்குமெண்ட்டை கொடுத்து சாமுண்டீஸ்வரியிடம் கையெழுத்து வாங்குகின்றனர். கையெழுத்து வாங்கி இவர்கள் வெளியே கிளம்ப கார்த்திக் வீட்டுக்குள் நுழைய என்ன விஷயம் என்று விசாரிக்க சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட்ட விஷயத்தை சொல்கிறார்.
56
வீட்டை எழுதி கொடுத்து ஏமாந்த சாமுண்டீஸ்வரி
கார்த்திக் எல்லாத்தையும் முழுசா படிச்சுதானே கையெழுத்து போட்டீங்க என்று விசாரிக்க சாமுண்டீஸ்வரியும் ஆமாம் என்று சொல்கிறார். அடுத்த நாள் காலையில் சிவனாண்டி வீட்டுக்கு வந்து சாமுண்டீஸ்வரி வீட்டை எழுதிக் கொடுத்துட்டார். இனி இது என்னுடைய வீடு. வீட்டில் உள்ள எல்லோரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்ல, ஒட்டு மொத்த குடும்பத்னர் மட்டுமின்றி ஊர் மக்களும் அதிர்ச்சி அடைகின்றனர். சாமுண்டீஸ்வரி கையெழுத்து நான்தான் போட்டேன். ஆனா வீட்டை எழுதி கொடுக்கவில்லை என்று சொல்கிறார்.
66
ரேவதி அண்ட் கார்த்திக் காதல் வலை
இதைத் தொடர்ந்து சிவனாண்டி மீது புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறேன் என்று சொல்ல, கார்த்திக் அதெல்லாம் வேண்டாம். பிறகு கோர்ட்டுக்கு செல்ல வேண்டி வரும். அதன் பின் 24 மணி நேரத்தில் வீட்டை எழுதி கொடுக்க வேண்டி வரும். அதனால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நானே உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று தனது ஆக்ஷன் வேட்டையில் இறங்குகிறார்.