இதைத் தொடர்ந்து சிவனாண்டி மீது புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறேன் என்று சொல்ல, கார்த்திக் அதெல்லாம் வேண்டாம். பிறகு கோர்ட்டுக்கு செல்ல வேண்டி வரும். அதன் பின் 24 மணி நேரத்தில் வீட்டை எழுதி கொடுக்க வேண்டி வரும். அதனால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நானே உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று தனது ஆக்ஷன் வேட்டையில் இறங்குகிறார்.
இதைத் தொடர்ந்து ரூமுக்கு சென்ற கார்த்திக்கிற்கு ரேவதி ஷாக் மேல ஷாக் கொடுக்கிறார். அவர் ஃபர்ஸ்ட் நைட் ஷெட்டப்புக்கு ஏற்பாடு செய்து வைத்திருக்க, அதைப் பார்த்து கார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஏற்கனவே கார்த்திக் தனது அத்தை பையன் என்பது தெரிந்தும், அவர் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிந்தும் அவரை துரத்தி துரத்தி காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்பதும் கூட ரேவதிக்கு தெரிந்துவிட்டது.