பல நாள் மூடி மறைத்த ரகசியத்தை மீனாவிடம் போட்டுடைக்கும் முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Sep 11, 2025, 01:14 PM IST

Siragadikka aasai Serial Today 795th Episode : விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷ் விவகாரத்தில் அஜய்யின் தந்தையிடம் கெஞ்சி கூத்தாடிய முத்துவுக்கு ஒரு பாசிடிவ் தகவல் கிடைத்திருக்கிறது.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷ் அஜய்யை தாக்கிய விவகாரம் போலீஸ் வரை சென்றிருக்கிறது. அஜய்யின் தந்தை கிரீஷ் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்கிற முடிவில் கறாராக இருக்கிறார். அவரை எப்படியாவது சமாதானப் படுத்திவிட வேண்டும் என்கிற முடிவில் அஜய்யின் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறார் முத்து. ஆனால் அஜய்யின் தந்தை காலை அலுவலகத்துக்கு கிளம்பும் போது அவர்களை திட்டி வெளியே அனுப்பிவிட்டு செல்கிறார். பின்னர் மாலை அவர் அலுவலகம் முடிந்து திரும்பி வரும்வரை முத்துவும், மீனாவும் அஜய் வீட்டின் முன் காத்திருக்கிறார்கள்.

24
முத்துவிடம் பேசும் அஜய் தந்தை

இதைப்பார்த்த அஜய்யின் தந்தை, அவர்களை வீட்டுக்குள் அழைத்து பேசுகிறார். அப்போது, முத்து, தனக்கு தெரிந்த ஒருவன் சின்ன வயசுல சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போனதால் அவனோட படிப்பே போனதாக சொல்கிறார். அங்கு சென்றதால் சமுதாயத்தில் மக்கள் அவனை பார்க்கும் பார்வையே வேற மாதிரி இருக்கும். நினைச்ச வேலைக்கு போக முடியாமல், கிடைச்ச வேலையை செஞ்சுட்டு வாழ்ந்திட்டு இருக்கான். அந்த மாதிரியான நிலைமை கிரீஷுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். கொஞ்சம் இரக்கம் காட்டுங்க சார் என மிகவும் ஃபீல் பண்ணி பேசுகிறார் முத்து.

34
கிரீஷுக்கு டெஸ்ட் வைக்க முடிவெடுத்த அஜய் தந்தை

இதையடுத்து மனம் மாறிய அஜய்யின் தந்தை, உங்க சொந்த பையன் மாதிரியே அவனுக்கு நீங்க, இவ்ளோ பேசுறீங்க. நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வர்றேன் என சொல்கிறார். அப்போ அவனை மன்னிச்சிடுவீங்களா சார் என முத்து கேட்க, அவரோ, அதை நான் நாளைக்கு சொல்கிறேன் என சொன்னதோடு, அந்த பையன் நிஜமாவே தனக்கு யாரும் இல்லை என்கிற ஏக்கத்தில் அப்படி செய்தானா? இல்ல வேண்டுமென்றே அப்படி செய்தானா? என்பதை கண்டுபிடிக்க நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வந்து அவனுக்கு டெஸ்ட் வைப்பேன். அவன் அந்த தப்பை தெரிஞ்சு பண்ணீருந்தா அவனுக்கான தண்டனை கண்டிப்பா கிடைக்கும், அப்படி இல்லேனா நான் என்னுடைய புகாரை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என சொல்கிறார்.

44
முத்துவின் பிளாஷ்பேக் என்ன?

பின்னர் வீட்டுக்கு செல்லும் முத்து, தன்னுடைய பெற்றோரிடம் கிரீஷ் விவகாரம் பற்றி பேசுகிறார். அப்போது, சின்ன வயசுலயே அம்மாவோட பாசம் கிடைக்காமல் போனால், மனசு என்ன பாடுபடும்னு எனக்கு தான் தெரியும் என சொல்ல, அப்போது குறுக்கிட்டு பேசும் மனோஜ், இவனை மாதிரியே கிரீஷும் சீர்திருத்த பள்ளிக்கு போகப்போறான் பாருங்க என சொல்கிறார். இதைக்கேட்ட முத்து டென்ஷன் ஆகி மனோஜின் காலரை பிடிக்கிறார். முத்துவுக்கு இவ்வளவு கோபம் வருது என்றால் அவருக்கு சிறுவயதில் ஏதோ நடந்திருக்க வேண்டும். அது என்னவென்று கேட்கிறார் மீனா. இத்தனை நாள் யாரிடமும் சொல்லாமல் இருந்த ரகசியத்தை சொல்லப்போகிறார் முத்து. அவர் எதற்காக சீர்திருத்த பள்ளிக்கு சென்றார் என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories