துப்பாக்கியால் சுட்ட புலிகேசி.. ஜீவானந்தம் செத்துட்டாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்

Published : Sep 11, 2025, 12:09 PM IST

Ethirneechal Thodargiradhu Serial 258th Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜீவானந்தத்தை துரத்தி சென்ற புலிகேசி, அவரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Today Episode

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் தனக்கு பார்கவி வேண்டாம் என முடிவெடுத்த நிலையில், ஜனனி, ரேணுகா, சக்தி, நந்தினி ஆகியோர் கல்யாண வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். திட்டமிட்டபடி குறித்த தேதியில் இந்த கல்யாணம் நடைபெறும் என ஆதி குணசேகரன் சொல்கிறார். அனைவரையும் மாப்பிள்ளை அழைப்புக்கு தயாராகும்படி கூறுகிறார். தர்ஷனிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் நிலைகுலைந்துபோய் இருக்கும் ஜனனி, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார். அவரால் ஜீவானந்தத்தையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

24
ஜீவானந்தம் செத்துட்டாரா?

புலிகேசி டீமிடம் இருந்து தப்பித்து காட்டுப் பாதை வழியாக பார்கவி உடன் சென்றுகொண்டிருந்த ஜீவானந்தத்தை புலிகேசி கண்டுபிடித்துவிடுகிறார். அவர்களை பார்த்ததும் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பிக்கிறார் புலிகேசி. அவர்களை சுடாமல் பிடித்துவிடலாம் என இன்ஸ்பெக்டர் பாண்டியன் கூறுகிறார். அவரது பேச்சை கேட்காத புலிகேசி, மறுபடியும் துரத்தி சென்று சுட ஆரம்பிக்கிறார். இதில் ஒரு குண்டு, ஜீவானந்தத்தின் நெஞ்சில் பாய்கிறது. இதையடுத்து இரத்த வெள்ளத்தில் இருக்கும் ஜீவானந்தத்தை மருத்துவமனை வருமாறு அழைக்கிறார் பார்கவி. ஆனால் அவரோ நீ கிளம்பு என சொல்கிறார்.

34
தர்ஷனை மிரட்டும் கதிர்

ஆதி குணசேகரனின் மிரட்டலுக்கு பயந்து அன்புக்கரசி உடனான கல்யாணத்துக்கு ஓகே சொன்ன தர்ஷன், ரூமில் தனியாக இருந்த நிலையில், அவரை சென்று பார்த்த கதிர், மரியாதையா சொல்றத மட்டும் கேளு, அப்புறம் இந்த மாப்ள மண்ணாங்கட்டிலாம் பார்க்க மாட்டேன் ஒரே மிதி தான் என மிரட்டுகிறார். பின்னர் வெளியே வந்து அறிவுக்கரசி உடன் சேர்ந்து ஆஸ்பத்திரியில் இருக்கும் ஈஸ்வரியை போட்டுத்தள்ள பிளான் போடுகிறார் கதிர். அதன் ஒரு படியாக ஈஸ்வரிக்கு ஆபத்து இருப்பதாக சக்திக்கு போன் வருகிறது. உடனே ஆஸ்பத்திரிக்கு வாங்க என சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறார்.

44
குழப்பத்தில் ஜனனி

சக்தி போன் போட்டது யார் என்பது தெரியாமல் ஜனனியும் குழம்பிப் போகிறார். இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கிளம்பிச் செல்கிறார்கள். அங்கு என்ன ஆனது? ஜீவானந்தத்திற்கு என்ன ஆச்சு? அவர் கொல்லப்பட்டாரா? இல்லை பார்கவி அவரை காப்பாற்றினாரா? தர்ஷனின் திருமணம் ஆதி குணசேகரன் திட்டமிட்டபடி நடந்ததா? அவர் ஈஸ்வரியை தாக்கியதற்கான வீடியோ ஆதாரம் வெளிவருமா? என்கிற கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும். சினிமா ரேஞ்சுக்கு சஸ்பென்ஸோடு சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கும் எகிற வாய்ப்பு உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories