Serial TRP : சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி டிஆர்பி ரேஸில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் கெத்து காட்டியுள்ள நிலையில், இந்த வார டாப் 10 பட்டியலை பார்க்கலாம்.
சின்னத்திரை சீரியல்கள் சினிமாவுக்கு நிகராக விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருவதால் அதனை பார்ப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முன்பெல்லாம் டிவியில் மட்டும் தான் சீரியல்களை பார்க்க முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால் தற்போது ஓடிடி தளங்களில் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். அதனால் டைம் பாஸ் பண்ணுவதற்காக சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இந்த நிலையில் 2025-ம் ஆண்டின் 35வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன சீரியல், எந்தெந்த இடத்தில் உள்ளது என்பதை பார்க்கலாம்.
24
டாப் 10 சீரியல்கள்
கடந்த வாரம் கடைசி மூன்று இடங்களை பிடித்த இராமாயணம், சின்ன மருமகள் மற்றும் அய்யனார் துணை ஆகிய சீரியல்கள் இந்த வாரமும் அதே இடத்தில் நீடிக்கிறது. இதில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இராமாயணம் சீரியல் 6.61 புள்ளிகளை பெற்று 10வது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் 6.97 டிஆர்பி ரேட்டிங் உடன் 9-ம் இடத்தில் நீடித்து வருகிறது, அதேபோல் அய்யனார் துணை சீரியல் 7.75 டிஆர்பி உடன் 8-ம் இடத்தை தக்கவைத்து இருக்கிறது. இதையடுத்து எஞ்சியுள்ள 7 இடங்களில் தான் அதிரடி மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது.
34
சரிவை சந்தித்த சன் டிவி சீரியல்கள்
கடந்த வாரம் விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தி இருந்த நிலையில், இந்த வாரம் சன் டிவி சீரியல்கள் கடும் சரிவை சந்தித்து இருக்கின்றன. அதன்படி கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் அன்னம் சீரியல் இந்த வாரம் 7.92 டிஆர்பி உடன் 7ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதேபோல் கடந்த வாரம் 5-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் மருமகள் சீரியல், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 7.93 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 4ம் இடத்தில் இருந்த கயல் சீரியல், இந்த வாரம் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டு 8.19 டிஆர்பியை பெற்றுள்ளது.
டிஆர்பி ரேஸில் கடந்த வாரம் டாப் 3-ல் இருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 4ம் இடத்தில் உள்ளது. அதற்கு 8.27 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த வாரம் 7-ம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் சிட்டாக பறந்து வந்து 3-வது இடத்தில் அமர்ந்திருக்கிறது. அந்த சீரியலுக்கு 8.53 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. வழக்கம்போல் மூன்று முடிச்சு சீரியல் இரண்டாம் இடத்திலும், சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்திலும் உள்ளது. இதில் மூன்று முடிச்சு சீரியலுக்கு 9.16 டிஆர்பியும், சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.29 டிஆர்பியும் கிடைத்துள்ளது.