பேய் த்ரில்லர் படங்களை காமெடி கலந்து எடுக்கும் பார்முலா மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர் நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய முனி படம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்ததை அடுத்து காஞ்சனா, சிவலிங்கா உள்ளிட்ட பல பேய் படங்களை உருவாக்கினார். காஞ்சனா மூன்று பகுதிகளாக வெளியாகியது. தற்ப்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் களமிறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, ராசி கண்ணா, த்ரிஷா என மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர், லட்சுமிமேனனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.