ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
Good Bad Ugly Day 1 Box Office Collection : விடாமுயற்சி படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இதற்கு முன்னர் அஜித்துடன் ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், விடாமுயற்சி போன்ற படங்களில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்த திரிஷா, குட் பேட் அக்லி மூலம் அவருடன் ஆறாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார். மேலும் இதில் சிம்ரன், பிரியா வாரியர், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
24
Ajith Kumar in 'Good Bad Ugly'
ரசிகர்களை கவர்ந்த குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் புஷ்பா போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்த இந்நிறுவனம் அஜித் படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் முழுக்கு முழுக்க அஜித் ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 28.5 கோடி வசூலித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.21.8 கோடி வசூலித்து இருக்கிறது. அதேபோல் கர்நாடகாவில் ரூ.3 கோடி வசூலித்துள்ளது. அஜித்தின் விடாமுயற்சி படத்தைக் காட்டிலும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் வெறும் 22 கோடி மட்டுமே வசூலித்திருந்தது.
44
Good Bad Ugly Collection
வசூலில் விஜய்யை முந்தினாரா அஜித்?
ஆனால் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் கோட் படத்தை குட் பேட் அக்லியால் நெருங்கக் கூட முடியவில்லை. கோட் திரைப்படம் உலகளவில் ரூ.126 கோடி வசூலித்து இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் அப்படம் சுமார் 35 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருந்தது. ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் அதைவிட 14 கோடி குறைவாக வசூலித்து இருக்கிறது. இந்த ஆண்டு அதிக வசூலித்த படம் என்றால் அது பிரதீப் ரங்கநாதனின் டிராகன் தான். அப்படம் 150 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. அந்த சாதனையை குட் பேட் அக்லி முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.