மார்க் ஷங்கர் உடல்நிலை குறித்து பவன் கல்யாண் போட்ட பதிவு!

Published : Apr 10, 2025, 08:01 PM IST

பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் காயமடைந்த விஷயம் தெரிந்ததே. சம்மர் கேம்பில் நடந்த தீ விபத்தில் மார்க் சங்கர் காயமடைந்தார். தற்போது மார்க் சங்கரின் லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட் குறித்த தகவலை அவரே கூறியுள்ளார்.

PREV
14
மார்க் ஷங்கர் உடல்நிலை குறித்து பவன் கல்யாண் போட்ட பதிவு!
Mark Shankar Health update

பவன் கல்யாண், மார்க் சங்கர்:

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர், பவர் ஸ்டார் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் சம்மர் கேம்பிற்கு சென்று தீ விபத்தில் சிக்கினார். அவரது கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன. நுரையீரலுக்குள் புகை சென்றதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. மகனுக்கு விபத்து ஏற்பட்டதை அறிந்த பவன் கல்யாண் உடனடியாக சிங்கப்பூருக்கு விரைந்தார். பவனுடன் சிரஞ்சீவி, சுரேகா ஆகியோரும் சிங்கப்பூர் சென்றனர். அங்கு சென்ற பவன் தனது மகனின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

24
Pawan Kalyan Son Mark Shankar

பவன் கல்யாண் மகன்:

லேசான தீ காயங்கள் ஏற்படுத்துள்ளதாகவும் அவை மெல்ல மெல்ல குணடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. மார்க் சங்கருக்கு காயங்கள் ஏற்பட்டு கட்டு போடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உதவியுடன் சுவாசிப்பதை பார்க்க முடிகிறது. புகை மற்றும் தீ காரணமாக தோல் சற்று கருகியிருந்தது. ஆனால் மார்க் ஷங்கருக்கு பெரிய காயங்கள் எதுவும் இல்லை என்பதால், பவன் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் . 

34
Junior NTR Tweet

ஜூனியர் என்டிஆர்:

பவன் மகனுக்கு விபத்து நடந்த தகவல் அறிந்ததும் என்டிஆர் உடனடியாக சமூக வலைத்தளத்தில், விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்வீட் செய்தார். இதற்கு பவன் பதிலளித்தார். இந்த கடினமான நேரத்தில் நீங்கள் காட்டிய அனுதாபத்திற்கும், ஆதரவிற்கும் நன்றி என கூறி இருந்தார். மேலும் இந்த சந்தர்ப்பத்தில், மார்க் சங்கர் குணமடைந்து வருகிறான். இப்போது நன்றாக இருக்கிறான் என்பதையும் வெளிப்படுத்தினார். தனது ஜனசேனா கட்சி ட்விட்டர் கணக்கில் இருந்து அவர் இந்த ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தற்போது வைரலாகி வருகிறது. 

44
Pawan Kalyan and NTR Bond

பவன் கல்யாண் உடனான பிணைப்பு:

பவன் கல்யாண் மகனுக்கு இப்படி நடந்தது தெரிந்ததும் என்டிஆர் உடனடியாக அதை விசாரித்தது பவனுடன் அவருக்கு இருக்கும் பிணைப்பை காட்டுகிறது. இண்டஸ்ட்ரியில் பலர் பதிலளிக்கவில்லை. ஆனால் தாரக் உடனடியாக ரியாக்ட் செய்ததால் பவன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Read more Photos on
click me!

Recommended Stories