Rachitha Mahalakshmi : தனிமையால் மனவேதனை... காதல் கணவரை பிரிந்தது குறித்து மவுனம் கலைத்த ரக்‌ஷிதா

Published : May 10, 2022, 08:26 AM IST

Rachitha Mahalakshmi : தனிமை தனக்கு மனவேதனையை தந்தாலும், அந்த கேரக்டரை போல் தனிமையை எதிர்கொள்ளும் துணிவும், தைரியமும் தனக்கு இருப்பதாக கூறியுள்ளார் ரக்‌ஷிதா. 

PREV
14
Rachitha Mahalakshmi : தனிமையால் மனவேதனை... காதல் கணவரை பிரிந்தது குறித்து மவுனம் கலைத்த ரக்‌ஷிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரக்‌ஷிதா மகாலட்சுமி. இதையடுத்து சரவணன் மீனாட்சி தொடரில் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பாப்புலர் ஆன இவர், கடந்த 2015-ம் ஆண்டு சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

24

திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார் ரக்‌ஷிதா. குறிப்பாக அவர் கணவருடன் இணைந்து நாச்சியார்புரம் என்கிற சீரியலில் நடித்தார். இதனிடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை பிரிந்து நடிகை ரக்‌ஷிதா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்று வருகிறார்களாம்.

34

இந்நிலையில், சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரக்‌ஷிதா, அதில் கணவனை இழந்து ஒரு குழந்தையை வளர்க்க போராடும் பெண்ணாக நடித்து வருகிறார். மேலும் அந்த கேரக்டர் தனது சொந்த வாழ்க்கையோடு ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளதன் மூலம், அவர் கணவரை பிரிந்ததை சூசகமாக அறிவித்துள்ளார்.

44

தனிமை தனக்கு மனவேதனையை தந்தாலும், அந்த கேரக்டரை போல் தனிமையை எதிர்கொள்ளும் துணிவும், தைரியமும் தனக்கு இருப்பதாக கூறியுள்ளார் ரக்‌ஷிதா. அவர் தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கி உள்ளார். கன்னடத்தில் உருவாகும் படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Sivakarthikeyan vs Arunvijay : சிவகார்த்திகேயன் - அருண் விஜய் இடையே அப்படி என்ன தான் பிரச்சனை?

click me!

Recommended Stories