திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் ஜூலி..அவருக்கு என்னாச்சு தெரியுமா?

Published : May 09, 2022, 07:58 PM IST

பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

PREV
18
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் ஜூலி..அவருக்கு என்னாச்சு தெரியுமா?
Bigg Boss Julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அறியப்பட்ட ஜூலி பின்னர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டார்.

28
Bigg Boss Julie

இந்த ரியாலிட்டி ஷோ மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார் ஜூலி. அந்த நிகழ்ச்சியில் இவரது கலகம் ரசிகர்களின் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானது.

38
Bigg Boss Julie

 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் படங்களில் நடித்து வந்த ஜூலி மாடலிலும் படு பிசியாகி விட்டார். ஹீரோயின்களுக்கு இணையாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

48
Bigg Boss Julie

இதற்கிடையே ஜூலியின் காதலர் மோசடி செய்துவிட்டதாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை ஜூலி அளித்திருந்தார். அந்த புகார் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது.

58
Bigg Boss Julie

பின்னர் விசாரணையில்  ஜூலி மீதுதான் மொத்த தவறும் என்பது ஊர்ஜிதமானது. இருந்தும் எப்போதும் போல சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்தும் வீடியோக்கள் வெளியிட்டும் பிஸியாக இருந்தார் ஜூலி.

68
Bigg Boss Julie

இதற்கிடையே புஷ்பா படத்தில் இருந்து வெளியான ஓ சோல்டரியா மாமா பாடலுக்கு சமந்தாவை விட மிகவும் மோசமாக குத்தாட்டம் போட்டு கவர்ச்சி வீடியோவை வெளியிட்டார் ஜூலி.

78
Bigg Boss Julie

அதன் பிறகு சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி  இறுதிவரை போட்டியாளராக இருந்து கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனிலும் இவரது கலகம் வெகுவாக பேசப்பட்டது.

88
Bigg Boss Julie

தற்போதும் பிக் பாஸ் ஜூலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள ஜூலி தனது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக லாசிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories